தேவையானவை:
காய்ச்சி குளிர வைத்த பால் – 2 கப்
ஸ்ட்ராபெர்ரி – 8
ஃப்ரெஷ் க்ரீம் – அரை கப்
சர்க்கரை – சுவைக்கேற்ப.
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி பழங்களை கழுவி துடைத்து, மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரையுங்கள். அதனுடன் பால் சேர்த்து விப்பர் பிளேடால் இரண்டு, மூன்று முறை அடியுங்கள். பின்னர் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இரண்டு முறை அடித்து, குளிர வைத்து குடிக்கலாம்.
குறிப்பு: ஸ்ட்ராபெர்ரியின் விதை கரகரப்பு பிடிக்காதவர்கள், மில்க் ஷேக்கை வடிகட்டி, அத்துடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்து குடிக்கலாம்.