வில்வ மரம் வேகமாக, நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் என்று வாசகர் நந்தகுமார் கேட்டிருக்கிறார்.
வில்வ மரத்துக்கென்று பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை; மற்ற மரங்கள், செடிகளை வளர்க்கும் முறையிலேதான் இதையும் வளர்க்க வேண்டும்.
வில்வ செடி நடும் முன், ஓரளவுக்கு வெயில் விழக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து, செடியின் அளவுக்கேற்ப, குழியைப் பறித்து அதில் மண்ணுடன் எழு கலந்து போட்டு அதில் செடியை நடுங்கள்.
மண்ணின் தன்மை, வெயிலின் தாக்கத்திற்கேற்ப காலையிலோ, அல்லது வெயில் ஓய்ந்த மாலையிலோ செடிக்கு தண்ணீர் ஊற்றுங்கள். வேர்களில் தண்ணீர் ஊற்றக்கூடாது. வேர்களைவிட்டு சற்று தள்ளி தண்ணீர் ஊற்றுங்கள்.
இயற்கை உரங்கள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
இதைச் செய்தாலே செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.
வீடியோவில், வளர்ச்சி ஊக்கி செய்முறையைச் சொல்லித்தருகிறார் மண்புழு விஞ்ஞானி பேராசிரியர். அகமது இஸ்மாயில்.