இனி வருங்காலங்களில் மிகப்பெரும் சவாலாய் விளங்கப்போகும் கொசுப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தமிக எளிமையான அதே நேரத்தில் பெரும் பகுதியினருக்கு பயனளிக்கும் விதமாக எண்ணையில் ஊறவைத்த மரத்தூள் உருண்டைகளை அறிமுகம் செய்கிறோம். கொசுக்கள் உற்பத்தியான பின்பு அதனை அழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான, செலவு பிடிக்கும் காரியம்.
சிறு சிறு அளவுகளில் கிழிக்கப்பட்ட உபயோகமில்லாத பழைய துணிகளில் சிறிதளவு மரத்தூள் போட்டு உருண்டைகளாக கட்டி அதனை பயன்படாத கழிவு எண்ணையில் ஊறவைத்தால் மரத்தூள் உருண்டைகள் எண்ணையை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். இந்த உருண்டைகளை கழிவு நீர் தேங்கியிருக்கும் இடங்களில் போட்டால் மரத்தூள் உருண்டைகள் உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணையானது மெல்ல மெல்ல தண்ணீரின் மேற்பரப்புகளில் பரவி அதில் இருக்கும் கொசு லார்வாக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் தடுத்து கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும். இது 2-3 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும். பின்னர் இன்னொரு உருண்டையை அவ்விடத்தில் போடலாம்.
பசுமைநடையின் முயற்சி இது.
– முத்துக்கிருஷ்ணன்
நன்றி தோழி அருமையான பதிவு….👏👏👌👍