
சென்னை மக்களின் மனம் எவ்வளவு ஈரம் நிறைந்தது என்பதை இந்த மழை வந்து தானே உலகுக்கு சொல்லிருக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லுள்ளம் கொண்டோர் செய்யும் உதவி அடைமழையை விட பெரிது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உணவு பொட்டலங்கள் தந்து தந்துகொண்டே இருப்பதால் நாம் உண்டு கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.”பசித்து புசி” என்பதுதானே நமது மரபு. ஆகவே கிடைக்கிறது என்பதற்காக அல்லாமல் பசித்தால் மட்டும் உண்போம்.
அனேக இடங்களில் பிரட், பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைய தருகிறார்கள் இதை வேறு வழி இல்லை என்றால் உண்போம் இல்லையேல் தவிர்ப்போம். காரணம் சில உணவை உண்ணாமல் இருப்பதை விட சில உணவுகளை உண்பது நமக்கு அதிக தீங்குகளை உருவாக்கும்.
பசி இல்லை என்றால் ஒரு பருக்கை கூட உண்ணாமல் இருப்போம் நண்பர்களே. இதை மட்டும் நாம் செய்தால் கூட போதும் வயிற்று போக்கு, வாந்தி, பேதி, காய்ச்சல் என்று நம்மை அச்சமூட்டும் எவையும் நம்மை அண்டாது.
கிருமிகளை கண்டுபிடித்த லூயி பாஸ்டர் கூட தன் கடைசி காலத்தில் கிருமிகள் ஒன்றும் இல்லை மனிதன்தான் எல்லாம் (germ is nothing human is everything ) என்று கூறி சென்றுவிட்டார். ஆனால் நாம் இன்னும் கிருமிகளை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறோம் என்பதை விட நம்மை பெருநிறுவனங்கள் ஊடக விளம்பரங்கள் மூலம் பயபுறுத்திக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

அரோக்கியமான உடலில் எந்த கிருமிகளும் நோய்களை உருவாக்குவதில்லை. கிருமிகளை விட மிக வேகமாக பரவும் நோய் பயம். ஆம் நண்பர்களே உலகத்தில் மிக பெரிய நோய் பயம் பயம் பயம் மட்டும்தான்.
தினம் தினம் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளிக்கோ அல்லது தெரு தெருவாய் குப்பை அகற்றும் லட்சக்கணக்கான தொழிலாளிகளுக்க்கோ வாந்தி பேதி காய்ச்சல் வருவதில்லை. அஞ்சு ஓடுபவர்களுக்குத்தான் இது அதிகம் வருகிறது.
உடலில் கழிவு இருந்தால் அதை உடல் வெலியேற்ற சளி காய்ச்சல் இரும்பல் வரும் இது இயற்கை. அப்பொது இயல்பாக பசி இருக்காது உடல் ஒய்வு கேட்கும் அதை மதித்து உண்ணாமல் ஓய்வெடுத்தால் போதும் காய்சல் தானாக ஓடிவிடும்..
நண்பர்களே இந்த மழை அல்ல இன்னும் எத்தனை மழை வந்தாலும் அது நம் வீடு வாசல் பொருட்களை அழித்துவிடலாம். ஆனால் நம் நம்பிக்கையை எவற்றாலும் அழிக்க முடியாது.
பயமில்லா நம்பிக்கை ஒன்று போதும் நாளை நமது வாழ்வில் எல்லா வளங்களும் வந்து சேரும்.
மிகவும் பயனுள்ள பதிவு பாராட்டுக்கள் அருள் ராஜ்