Uncategorized

ஏன் நாப்கின் வேண்டாம் என்கிறீர்கள்?

கீதா இளங்கோவன்

geetha illangovan

பிரபலமான ஆங்கில நாளேடு ஒன்று, சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதாக ஒரு பக்க விளம்பரம் ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது.

அதில், தர வேண்டிய நிவாரணப் பொருட்கள், தரக்கூடாத நிவாரணப் பொருட்கள் என்று இரண்டு பட்டியல்கள். தரக்கூடாதவை பட்டியலில் சானிடரி நாப்கினைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். பெண்களின் அத்தியாவசியத்தேவையான சானிடரி நாப்கின் எப்படி கொடுக்கப்படக் கூடாதவை பட்டியலில் வரமுடியும் என்று புரியவில்லை.

எனக்குத் தெரிந்து சென்னை வெள்ளப் பேரிடரின் போதுதான், முதன்முதலாக நிவாரணப் பொருட்களின் அட்டவணையில் பெண்களுக்கு சானிடரி நாப்கின் தேவை என்று வெளிப்படையாகப் பேசப்பட்டது, பலர் கொடையாகத் தந்தனர், பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கும் வழங்கப்பட்டது, வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படி ஒரு விளம்பரம் ஏன்?

1. பெண்களுக்கான நாப்கினை வாங்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிப்பது பாலின சமத்துவத்திற்கு எதிரான தீண்டாமை இல்லையா?

2. குழந்தைகள், வயதானவர்களுக்கான `டயப்பர்’ வேண்டும் என்று வெளிப்படையாக கேட்கும் நீங்கள், கேட்கத் தயங்கிக் கொண்டு மனதில் புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, நாப்கினை “கொடுக்கப்படக்கூடாத” பொருட்களின் வரிசையில் வைப்பது வன்மம் இல்லையா?

3. ஒருவேளை உங்கள் தன்னார்வலர்கள் நாப்கின் பாக்கெட்டுகளைத் தொட கூச்சப்படுவார்கள் என்பதால் இப்படி ஒரு முடிவு என்றால் பாலியல் விழிப்புணர்வுக்கு தடையானது உங்கள் செயல் என்பது புரியவில்லையா?

4. நாங்கள் தனியார் நிறுவனம், எதை வாங்குவது, மறுப்பது என்பது எங்கள் உரிமை என்று நீங்கள் சொல்லக் கூடும். இருக்கலாம். குறைந்தபட்சம் நாப்கினைப் பற்றி பேசாமல் அமைதியாகவாவது இருந்திருக்கலாமே. நீங்கள் இப்படிச் சொல்வதால் அதை அப்படியே நம்பும் அப்பாவி வாசகர்கள், உங்களுக்கு மட்டுமல்ல, இனிமேல் எங்கே நிவாரணப் பொருட்கள் அனுப்பினாலும் சானிடரி நாப்கினை அனுப்பக் கூடாது போலிருக்கிறது என்று அதை வாங்கி அனுப்புவதை நிறுத்திவிடும் ஆபத்தும் இருக்கிறதே.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது நியாயமற்றது ஊடக நண்பரே…

நான்கைந்து நாட்களுக்கு முன், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணைக்கு நிவாரணப் பணிக்காகச் சென்றிருந்தோம். நாங்கள் நாப்கினை அளித்த போது, வேகமாக வாங்கிக் கொண்ட பெண்களின் கண்களில் தெரிந்த நன்றியுணர்வை வார்த்தைகளில் வடிக்க இயலாது.

இயற்கைப் பேரிடரை பெண்களின் கோணத்திலும் அணுகும், புரிந்து கொள்ளும் பயிற்சி மீடியாவுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. மனிதாபிமானப் பணியில் கூட தீண்டாமைக் கொடுமையைக் காணும் போது நாம் பயணப் பட வேண்டியது வெகுதூரம் தான் !

கீதா இளங்கோவன், பெண்ணிய செயற்பாட்டாளர். ‘மாதவிடாய்’ ஆவணப்பட இயக்குநர்.

“ஏன் நாப்கின் வேண்டாம் என்கிறீர்கள்?” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. பயணிக்க வேண்டியது பல கிலோமீட்டர்கள் அல்ல …உலகின் வடகோடிக்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு ….எனக்கு 63 வயது …மனைவிக்கு 58…டிவி பார்க்கும் போது இந்த விளம்பரம் வந்தால் சானலை மாற்றுவாள் …ரிமோட் என்னிடம் இருந்தால் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்வாள் …பெண்களிடமே இதுகுறித்து புரிதல் இல்லை கூச்சம் என நினைக்கிறேன் ..இதில் என்ன கூச்சம் ?உப்பு புளி வாங்குவதுபோல் இதுவும் ஒரு தேவை …சத்தமாக கேட்டு வாங்கலாம் …பக்கத்தில் இருப்பவரோ …கடைக்காரனோ நமட்டு சிரிப்பு சிரித்தால்,…”நாயே உங்க அம்மாவும் அக்கா தங்கச்சியும் பெண்கள் தான் …அவர்களுக்கும் உண்டு” என செருப்பை கழட்டி அடிச்சால் சரியாக போகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.