சென்னை பெருமழை குறித்து எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்திருக்கிறார் இந்திய வானிலை மைய இயக்குனர் ரத்தோர். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “கடந்த அக்டோபர் 16-ஆம் தேதியே வழக்கத்தைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் அளவு அதிகமாக இருக்கும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தோம்.
அதுபோல 112 சதவிகிதம் அதிக மழை தமிழகத்தில் பொழிந்துள்ளது. இதுவரை 43.82 செ.மீ மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது” என அவர் தெரிவித்திருக்கிறார்.