தமிழ்நாடு

மழையை நாம் குறை சொல்லக்கூடாது…

இளமதி

“இந்த வடகிழக்கு பருவமழையை ஒரு Disaster., பேரிடர்னு சொல்றாங்க. என்னை பொறுத்தவரைக்கும் இதை நான் பேரிடர்னு சொல்லமாட்டேன். இது ஒரு Resource..வளம். இந்த மாதிரி ஒரு பெருமழையை, ஒரு நாளில் 32செ.மீட்டர் மழை கிடைக்கிறது என்பதை ஒரு வளமாகத்தான் கவனிக்க வேண்டுமே தவிர, பேரிடர்னு சொல்லக்கூடாது. அதனால் நம்முடைய அணுகுமுறையே, பார்வையே தவறுன்னு நினைக்கிறேன். ”
தென்மேற்கு பருவமழை என்பது ஒரு ஜென்டில்மேன்…. அது ஒரு ஜென்டில் மேனர்லி சீஸன். ஆனால் வடகிழக்கு பருவமழை என்பது ஒரு Rogue சீஸன். அது நமக்கு தெரிந்த விஷயம்தான். எப்போதுமே வடகிழக்கு பருவமழை என்பது புயலுடன் கூடிய மழைதான். புயல் இல்லாமல் மழை வராது.

– ஜனகராஜன், President, South Asia consortium for interdisciplinary water resources studies
பருவமழை 2015 – ரௌத்ரம் பழகு (புதிய தலைமுறை) நிகழ்ச்சிக்காக பேசிய நிபுணர் ஜனகராஜின் பதிவு முக்கியமானதாகப் பட்டது. அவர் பேசியதின் முழுவடிவமும் இங்கே….

இரண்டாவது அது பரவலாக 3 மாதத்திற்கு மழை தரக்கூடிய சீஸன் இல்லை. ஒரே சமயத்தில், மூன்று அல்லது நான்கு நாட்களில் கொட்டித் தீர்த்துவிடும். அதனால் வடகிழக்கு பருவமழையின் தன்மை நமக்கு தெரிந்ததே. அப்படியிருக்கும் சமயத்தில் இந்த விதமான பருவமழையை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளும், திட்டங்களும் நம்மிடம் இருக்கிறதா..?
நம்மிடம் இல்லை. மழை வரும்போதுதான் பாதிப்பை எப்படி குறைப்பது, தடுத்து நிறுத்துவது என்பதை பற்றி யோசிக்கிறோம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. வருமுன் காப்போம் என்பது. அது நல்ல பழமொழி. வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன் அதன் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கு நம்மிடம் திட்டங்கள் இருக்கிறதா என்றால் இல்லை. மழை, புயல், வெள்ளம் என வந்த பின்னர்தான் அரசியல் கட்சிகளும், அமைச்சர்களும், அதிகாரிகளும், எம்எல்ஏக்களும் ஊர்ஊராகச் சென்று பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இது சரியான திட்டமாக இருக்க முடியாது. என்னைக் கேட்டால் ஆண்டு முழுக்க இதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

இந்த வடகிழக்கு பருவமழையை ஒரு Disaster., பேரிடர்னு சொல்றாங்க. என்னை பொறுத்தவரைக்கும் இதை நான் பேரிடர்னு சொல்லமாட்டேன். இது ஒரு Resource. இந்த மாதிரி ஒரு பெருமழையை, ஒரு நாளில் 32 செ.மீட்டர் மழை கிடைக்கிறது என்பதை ஒரு வளமாகத்தான் கவனிக்க வேண்டுமே தவிர, பேரிடர்னு சொல்லக்கூடாது. அதனால் நம்முடைய அணுகுமுறையை, பார்வையே தவறுன்னு நினைக்கிறேன்.
இன்னொரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். சென்னையை பொறுத்தவரைக்கும் இந்த மழை நமக்கு புதிதல்ல. கடந்த 50, 60 வருடங்களில் நான்கைந்து முறை இதுபோன்று பெருமழை பெய்திருக்கிறது. இது போன்றதொரு மழை இப்போதுதான் பெய்திருக்கிறது என்பதும், இது போன்று இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் பொய்.

இந்த மழையை பேரிடர் என்று சொல்வதற்கும், இத்தனை உயிரிழப்புகளும், சேதமும் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கும் என்ன காரணம்? இப்படி இழப்பு ஏற்பட நாம் அனுமதித்திருக்கக்கூடாது… அவ்வளவே. இவ்வளவு வெள்ளம் எப்படி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்யமால், வெள்ளம் வந்ததும் வெள்ள நிவாரணம் கொடுப்பது, வறட்சி வந்ததும் வறட்சி நிவாரணம் கொடுப்பது…. இந்த அணுகுமுறையை முதலில் மாற்றவேண்டும். வெள்ளத்தையும், வறட்சியையும் ஒருங்கிணைக்க வேண்டும். வறட்சி காலங்களில் இருக்கக்கூடிய நீர்நிலைகளை சீரமைத்து சரியாக வைத்துக்கொண்டால், மழைக்காலங்களில் வீணாகக்கூடிய நீர் அதில் தேங்கும்.

இவ்வளவு அதிகமாக வெள்ள பாதிப்பு ஏற்பட காரணம் என்ன..?

• வெளிநாடுகளில் நகரம் உருவாக்கப்படும்போது முதலில் நீர் மட்டம், வடிகால் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவை முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அங்கு நீர்நிலைகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பர்.

• நம் சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் விரிவாக்கம் நடந்து கொண்டே இருக்கிறது. 171 சதுரகி.மீ, 471ச.கி.மீட்டர், 1171 பின்பு 8ஆயிரம் ச.கிமீ எனுமளவிற்கு காஞ்சிபுரம், திருவள்ளுர், அரக்கோணம் தாலுகா அனைத்தையும் உள்ளடக்கிய சிஎம்டிஏ திட்டம் உள்ளது. அப்படியென்றால் இங்கு கண்மூடித்தனமான விரிவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

• அப்படி நடக்கும்போது அத்திட்டத்தில் இயற்கை வளங்களை காப்பதற்கு, நீர்நிலைகளை காப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பதை பார்த்தால் எதுவுமில்லை. சிஎம்டிஏ மாஸ்டர் ப்ளான் 2- ஐ எடுத்துப் பார்த்தால், அதில் நீர்நிலைகளை பாதுகாக்கக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. நிலப்பயன்பாடு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கமர்ஷியல் கட்டுமானங்கள், இன்டஸ்ட்ரியல் ஏரியான்னு டீ மார்க்கெட் பண்றாங்களே தவிர, நீர்நிலைகளை காப்பதற்கான எந்த ஆலோசனைகளும் கிடையாது.
• சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களை மட்டும் எடுத்துக்கொண்டால், இன்றைக்கு Tank memoirs படி 3600 ஏரிகள் இருக்கின்றன. இந்த ஏரிகளை காப்பத்தறதுக்கு நாம என்ன முயற்சிகளை எடுத்துருக்கோம்…?

• இன்றைக்கு நம்மால் அற்புதமான பல கட்டுமானங்களை, நகரக்கட்டமைப்பை நம்மால் உருவாக்கமுடியும்.… ஆனால் ஒரு ஏரியை அவ்வளவு எளிதாக உருவாக்க முடியாது. ஒரு ஏரியை எவ்வளவு செலவு பண்ணினாலும் உருவாக்க முடியாது. அதற்கு முதலில் Gravity, gravity flow வேணும், Embank பண்றதுக்கான கட்டுமானம் வேணும், குறிப்பிட்ட இடம் வேணும், முதலில் ஏரியை உருவாக்குவதற்கான நிலம் வேண்டும். இன்றைக்கு நமக்கு அதற்கான நிலம் கிடையாது.

• நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு 500, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை நாம் நிமிடங்களில் கால பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

•  நான் பார்த்த வில்லிவாக்கம் ஏரி என்பது மிகப்பெரிய ஏரி. அது எத்தனை பேருக்கு தெரியும். அதற்குள்தான் சிட்கோ நகர், இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஹவுசிங் போர்டு எல்லாமும் இருக்கிறது. அப்புறம் அதில் வெள்ளம் வராமல் என்ன பண்ணும்…?

• அதேபோல் வியாசர்பாடியில் ஒரு ஓடை இருக்கிறது. அதை நம்பி 16 ஏரிகள் இருந்தன. இன்று அந்த 16 ஏரியையும் காணோம்.
• இன்று நகரத்திற்குள்ளாகவே நாம் பல ஏரிகளை சாப்டுட்டோம். நகரத்திற்கு வெளியே அம்பத்தூரை தாண்டி அத்தனை ஏரிகள் உள்ளன. அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கிறோம்.

• வெள்ளம் வருவதற்கு அடுத்த முக்கியமான காரணம் Natural breeches, ஏரியின் கரை கொஞ்சம் பலமற்று இருந்தாலே கரை உடைந்துவிடும். ஆனால் நிறைய இடங்களில் ஏரி அருகில் குடியிருப்பவர்கள் தண்ணீர் அதிகமாக வருகிறது என்று தெரிந்தவுடன் உடைத்து விடுகின்றனர். அது அனைவரையும் பாதிக்கிறது.

• நான் சொல்ல வருவது என்னவென்றால் இருக்கின்ற 3600 ஏரிகளில் அதனுடைய முழு கொள்ளளவு இன்றி, தூர்ந்து போயுள்ளது. பராமரிப்பே இல்லை. அதனால் கொஞ்சம் மழை பெய்தாலே ஏரி நிறைந்து தண்ணீரும் வடிகிறது. முழு கொள்ளளவையும் எட்டுவது போல் நாம் பராமரித்திருந்தால், வெள்ள பாதிப்பை வெகுவாக குறைத்திருக்க முடியும்.

• இன்று 6டிஎம்சி தண்ணிர் கடலுக்குள் போயிடுச்சின்னு சொல்றாங்க… ஒரு கணக்கிற்கு அதை லிட்டர் கணக்கிற்கு மாற்றினோமென்றால், எம்எல்டி – Million liters per day) கிட்டத்தட்ட 450எம்எல்டி தண்ணிய நாம சென்னைக்கு கொடுத்திருக்க முடியும். அவ்வளவு லிட்டர் தண்ணி இன்று வீணாகியிருக்கிறது. அதில் பாதியளவு நீரையாவது இத்தனை ஏரிகளிலும் சேமித்திருக்க முடியும்.. வெள்ள பாதிப்பையும் குறைத்திருக்க முடியும். ஏரிகள் பராமரிக்கப்பட்டிருந்தால். இதைத்தான் ஆங்கிலத்தில் Double disadvantage – இரட்டை இழப்பு என்பர்.

• ஒரு இழப்பு என்பது வெள்ளமாக அடித்துச் செல்லப்பட்ட தண்ணீரின் இழப்பு. மற்றொரு இழப்பு கால்நடைகள் முதற்கொண்டு மனிதர்கள் வரைக்கும் ஏற்படும் உயிரிழப்பு, இடப்பெயர்வு, பொருட்சேதம், என மக்கள் படும் துயரம்.. எதனால் என்றால் நம்மிடம் ஒரு தொலை நோக்குத் திட்டம் இல்லை…

ஏரிக்கு எத்தனை கால்வாய் உண்டு தெரியுமா…?

ஏரியை எடுத்துக்கொண்டால் ஏரிக்கு இரண்டு கால்வாய்கள் உண்டு. வரத்துக் கால்வாய், உபரி நீர் கால்வாய். இன்றைக்கு இரண்டுமே கிடையாது. எப்படி ஏரிக்கு தண்ணீர் வரும். இவையெல்லாம் உடனடியாக பார்த்து, சரி செய்யப்பட வேண்டிய பிரச்சனைகள்..
அப்புறம் புதிய சாலை போடும்போது, பழைய சாலையை முழுவதுமாக அகற்றிவிட்டு அதன்பின்பு புது சாலை போடவேண்டும். மேல மேல ரோடு போடும்போது, வீடுகள் அனைத்தும் பள்ளமாகின்றன. லட்சங்கள் கொடுத்து வீடு வாங்கியவர்களின் வீடுகளிலெல்லாம் 4அடி வரைக்கும் தண்ணீர் நிற்காமல வேறென்ன செய்யும்..?

இதற்கெல்லாம் யார் காரணம்……?

மாநகராட்சிதான். ரோடு போடுவதற்கென்று சில விதிமுறைகளை இருக்கிறது. அதை எதையும் பின்பற்றாமல் ரோடு மேல ரோடு போட்டால், வீடு கீழ போகத்தான் செய்யும், தண்ணீர் தேங்கதான் செய்யும்.
• அடுத்த முக்கியமான காரணம் Storm water drain- மழை நீர் வடிகால்

இன்றைக்கும் பல கோடி ரூபாய செலவுல கட்டிட்டேதான் இருப்பாங்க. ஆனா அத கட்டும்போது பாத்தீங்கன்னா, நீர்மட்டத்த பார்க்கமா அவங்க பாட்டுக்கு கட்டிட்டு, திரும்பி பாக்காம போயிட்டே இருப்பாங்க. அப்புறம் பராமரிப்பும் இருக்காது. அப்புறம் கட்டிட்டு போன சில நாட்கள்ல அதுல குப்பை போட ஆரம்பிச்சிடுவாங்க., டாக்டர்ஸ் பயன்படுத்துற க்ளவுஸ், சிரிஞ்சினு சகலமும் அதுக்குள்ள கிடக்கும். அப்புறம் எப்ப பராமரிப்பாங்கன்னு பாத்தீங்கன்னா…. மழை வெள்ளம் வந்தவுடனே ஜேசிபி எடுத்துட்டு வந்து கட்டுன மழை நீர் வடிகாலை உடைப்பாங்க… இதுலயும் நமக்கு இரட்டை இழப்பு ஏற்படுது.. கட்டியதற்கான பொருட்செலவு, அதில் நீர் வடியாதது, அதை உடைப்பது… என்ன இதெல்லாம்…. என்ன நடந்து கொண்டிருக்கிறது…?

உண்மையா மழை நீர் வடிகால் கட்டுவதற்கான நோக்கமே, வெள்ள நீரை சேமிக்கறதுக்குதான். ஆனா இங்க வெள்ளமும் போகல, வெள்ள நீரையும் சேமிக்கலை, குப்பைகள் கிடக்குது… So total waste, utter loss.. மக்களோட கஷ்டங்களும் அதிகமாகிகிட்டே போகுது, அரசாங்கம் ஒரு பக்கம் செலவு பண்ணிகிட்டே இருக்கு. ஆனா இழப்பும் அதிகமாகிகிட்டே போகுது….
சென்னையில் மூன்று, நான்கு நீர் வழித்தடங்கள் உள்ளன.
அடையாறு, கூவம் நதி, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லாறு (?), மாம்பலம் கால்வாய் இப்படி முக்கியமான நீர்வழித்தடங்கள் உள்ளன. நமக்கு தெரிந்த இந்த நீர்நிலைகளில் அடையாறு கிட்டத்தட்ட 250மீட்டர் அகலம் இருந்தது. 250மீட்டர்னா கால் கி.மீட்டர் அந்தளவிற்கு அகலாயிருந்தது. இன்றைக்கு அது 60கி.மீட்டர் கூட இல்லை. வருவாய்த்துறை இன்று அதை அளவெடுத்து, ஆவணப்படுத்தி, மறு ஆக்கம் செய்யமுடியுமா…?
கூவம் நதியை, 1901/, 1902இல் இருந்த வருவாய்த்துறை ஆவணப்படி மறு ஆக்கம் செய்யமுடியுமா…?

பக்கிங்ஹாம் கால்வாயை, ஓட்டேரி நல்லாறை மறு ஆக்கம் செய்யமுடியுமா…?

அதை பண்ணமாட்டார்கள், அது குறுகிகிட்டே வரும்… அப்புறம் எப்படி வெள்ளம் ஓடும்?

அப்புறம் பாத்தீங்கன்னா கடல் வாய். ஆறுகள் போய் சேருமிடம் பாத்தீங்கன்னா மேடு… எல்லாம் அடைஞ்சி கிடக்கும். வெள்ளம் வரும்போது நாலஞ்சி ஜே.சி.பி போய் அதை தூர்வாரும்.. என்ன இதெல்லாம்? என் நம்மகிட்ட ஒரு விஷன் இல்ல…? ஏன் நம்மகிட்ட ஒரு Policy perspective இல்ல? நம்ம செலவழிக்கிற பணத்தை ஏன் சரியா செலவு பண்றதில்ல? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்றுக் கொள்வது…?ஜனநாய நாட்டுல இதற்கெல்லாம் யாராவது பொறுப்பெடுத்துக்கணும். இந்த பொறுப்பை மக்கள்தான் எடுத்துக்கணும்.
Ecology, environment account என்று ஒன்று உள்ளது. ஒரு பக்கம் இந்த Ecology, environment பாதுகாக்கறதுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய செலவு பண்றோம். ஆனா Ecology, environment கீழ போயிட்டே இருக்கு. ஆனா இன்னொரு பக்கம் Gross domestic product செலவு அதிகரித்து கொண்டேயிருக்கிறது. செலவு எல்லாம் தனிநபர் வருமானம், நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் ஏறிட்டே போகும். ஆனால் செலவு பண்ணியதற்கான பயன் ஒன்றுமே இருக்காது. கஷ்டம்தான் அதிகமாகிட்டே இருக்கு.

நமக்கு இப்போதைய தேவையெல்லாம் ஒருங்கிணைந்த பார்வைதான். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எடுத்துக்கோங்க. 8ஆயிரம் சதுர அடி கொண்டது. தாம்பரம், மதுராந்தகத்திலிருந்து வரும் வெள்ளமனைத்தும் இங்குதான் வந்து தங்கும். இன்னைக்கு 8ஆயிரம் ஏக்கர் இருக்கா?
அப்புறம் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம்நகர், சதாசிவம் நகர்னு எல்லா பக்கமும் வெள்ளம் தேங்காம என்ன பண்ணும்?
We destroyed our ecology….
நிலப்பயன்பாட்டை பத்தி பேசுறாங்க. மாஸ்டர் ப்ளான்ல இங்கதான் தண்ணி வடியுற இடம்… இங்க கட்டுமானம் கட்டக்கூடாதுன்னு எங்கயாவது சொல்லிருக்காங்களா? இது ஏரியோட எதிர்வாய், ஏரியோட fore shore இடம், இது surplus channel, இது in-let channel இங்கயெல்லாம் கட்டுமானம் கட்டக்கூடாதுன்னு எங்கயாவது சொல்லிருக்காங்களா…?

ஒரு சின்ன விஷயம் சொல்றேன் கேளுங்க…

ஏரிகள் நாளுக்கு நாள் குறுகிட்டே இருக்குங்க. 3600ஏரிகள் இருக்குன்னா வருவாய்த்துறை ஆவணப்படி அனைத்தும் உறுதிபடுத்தணும், சீரமைக்கணும். நீர் பிடிப்பு பகுதியை சீரமைக்கணும். இதெல்லாம் பண்ண முடியுமா…? இதெல்லாம்தான் தீர்வு.

மழையை நாம் குறை சொல்லக்கூடாது…

ஒரு நாள் 35செ.மீட்டர், 40செ.மீட்டர் பெய்யுதுன்னா குறை சொல்லாதீங்க. இது வடகிழக்கு பருவமழை அப்படிதான் இருக்கும். நமக்கு தெரிந்ததுதான். நாம இயற்கையை சூறையாடிட்டு, தவறா பயன்படுத்திட்டு மழையை குறை சொல்லக்கூடாது. இதற்கெல்லாம் விலை கொடுப்பது மக்கள்தான் அவதிப்படுறாங்க.

ஃப்ளாட் விக்குறாங்கன்னு போய் வாங்குறோம். முதல்ல சாலையிலருந்து Elevation என்னன்னு பாக்கணும், இங்க வெள்ளம் வடியுமான்னு பாக்கணும். அதெல்லாம் பாத்துதான் வாங்கணும்.
மே, ஜூன் பாக்கும்போது அழகான கட்டமைப்பு இருக்கும். மரம் நடுவாங்க. பாக்க அழகா இருக்கும் வித்துடுவாங்க. மழை வரும்போதுதான் நீர் மட்டம் என்னன்னு தெரியும். அப்புறம்தான் கஷ்டப்படுவாங்க.

ஒட்டுமொத்த பார்வை இல்லன்னா வருங்காலத்திலயும் நாம இதே தப்பதான் செய்வோம். வெள்ள நிவாரணம் கொடுப்போம். அவங்கள கொண்டு வந்து எங்கயாவது உக்கார வச்சி சாப்பாடு போட்டு திருப்பி அனுப்பி வப்போம். இதுதான் நடந்துட்டே இருககும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் – மாவட்டங்கள்ல 1300மி.மீட்டர் மழை பெய்யற இடம். வடிகால் அமைப்பை நாம ஏற்கனவே பாழ்படுத்திட்டோம். 1971 topography படி திருவள்ளுர், காஞ்சிபுரம் வடிகால் திட்டத்தை நான் பார்த்தேன். அவ்வளவு நெருக்கமான, துல்லியமான ஒன்றுக்கொன்று பின்னி பிணைஞ்சி சிக்கலான் அமைப்பு. அவ்வளவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இருக்கின்ற நீர்நிலைகளையாவது பாதுகாத்தால், அடையாறை இனியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தடுத்தால், கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் அனைத்தையும் பாதுகாத்தால் மட்டுமே வெள்ள அபாயத்திலிருந்து நாம் தப்பிக்கமுடியும். சென்னை நீர்த்தாகம் அதிகமுள்ள நகரம்னு சொல்றாங்க. இவ்வளவு மழை பெய்யிற இடம் நீர்த்தாகம் உள்ள நகரம இருக்கமுடியாது. அது தவறு. இது மனிதர்களால் உருவான சிக்கல்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்…… Keep your bottom clean

ஸ்மார்ட் சிட்டி, சேட்டிலைட் சிட்டி உருவாக்கம் என்றால் ஒரு பெரிய மேம்பாலமோ, கட்டுமானமோ ஸ்மார்ட் சிட்டியாகிவிடாது. தலையை சுத்தமாக வைத்துக்கொண்டு, கீழ்ப்பகுதியை அசுத்தமாக வைத்துக்கொள்வது போல் செய்யக்கூடாது. முதலில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் கொடுக்கமுடியுமா…? மழை நீர் வடிகால், வெள்ளம் வராத ஒரு நல்ல அமைப்பு, சரியான குப்பை அகற்றும் முறை, திடக்கழிவு மேலாண்மை, E-waste management இதெல்லாமும்மான் ஒரு நகரத்தின் அடிப்படையான தேவைகளாக இருக்கமுடியும். இதைத்தான் உருவாக்கவேண்டும். இதை தீர்க்காமல் அழகான கட்டுமானங்களை வைத்து ஒரு ஸ்மார்ட் சிட்டியை கட்டிவிட முடியுமா…? Keep your bottom clean… அதன்பின்பு அது தானாகவே ஸ்மார்ட் சிட்டி ஆகும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.