மழைக்காலங்களில் வெளியில் போய் ஏதாவது காய் வாங்கி வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மிக எளிதாக பஜ்ஜி செய்ய கிடைக்கக் கூடிய காய், வெங்காயம். வெங்காய பஜ்ஜியின் சுவையும் அபாரமாக இருக்கும். இதோ ரெசிபி; செய்து சுவையுங்கள்.
தேவையானவை:
வெங்காயம் – 3
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
ஆப்ப சோடா – அரை சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்தி எடுத்து காயும் எண்ணெயில் போடுங்கள். இருபுறமும் திருப்பி வேகவிட்டெடுங்கள்.