அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என இதுவரை வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார்.
அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா?
அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும் ..அதை நான் கண்டிப்பா பிடிப்பேன்..
தற்போது வெளியாகியிருக்கும் வந்தா மல படத்தில் வெளிப்படையா பேசும் பெண்ணா நடிச்சிருக்கீங்களே?
சேரியில வாழுற சென்னை பொண்ணு நான்.. இந்த படத்துல எனக்கு ரொம்ப போல்டான கேரக்டர்.. அங்க உள்ள பெண்கள் ஆண்களுக்கு சமம். அவங்களே ஆம்பள மாதிரி எல்லா வேலையும் செய்வாங்க. காதலைக்கூட மென்மையா சொல்லத் தெரியாது. ரோட்டோரம் படுத்திருக்கிறவங்களோட தாம்பத்திய வாழ்க்கை வெட்கப்பட்டா நடக்குமா? அப்படித்தான் வசந்தாவும். அவளுக்கு எதையும் ஒளிச்சிப் பேசத் தெரியாது. அதனால அந்த வசந்தா பேசுனது ரொம்பக் கம்மிதான். ..
நடிக்கும் படங்கள் பற்றி…
ரீங்காரம், திருப்பதி லட்டு, சாரல் னு மூணு படம் பண்றேன் சார்.. திருப்பதி லட்டு படத்துல சுரேஷ் காமாட்சி சார் இயக்கத்துல விஜய் வசந்த் சார் கூட ஜோடியா பண்றேன்.. முழுக்க முழுக்க காமடிப் படம்.