சுற்றுச்சூழல்

கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!

ஞா. கலையரசி

இந்தியா முழுமையும் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற நாட்களில் பட்டம் விடுவது பாரம்பரியமான விளையாட்டு.  சிறுவர் முதல் பெரியவர் வரை வித விதமான உருவங்களில் வண்ணமயமான  பட்டங்களை வானில் பறக்கவிட்டு, ரசித்து மகிழ்ந்த காலம் மலையேறி, இன்றைக்குப் பட்டம் பறக்க விடுதல் என்பது, மற்றவரின் பட்டத்தை அறுத்து விடுதல் என்ற சண்டையாக மாறியிருக்கிறது.  மற்றவரின் துன்பத்தில், இன்பங் காணும் மனநிலை பெருகியிருக்கிறது!

மற்றவர்களின் பட்டத்தைப் பாதியில் அறுத்து விட்டுத் தன்னுடையதை மட்டும், உயரே பறக்கவிடும் கொடிய எண்ணத்துக்கு,  கண்ணாடித்தூள் பூசப்பட்ட நைலானால் ஆன சீனாவின் மாஞ்சா பெரிதும் உதவுகிறது.  மிகவும் ஆபத்தான இந்தக் கயிறு, சமயத்தில் மனிதர்களின் உயிருக்கும் உலை வைக்கிறது.  ஆண்டுதோறும் பட்டம் விடுங்காலங்களில், பல்வேறு பறவைகள் இக்கயிறினால் கழுத்தறுபட்டு இறக்கின்றனவாம்.

பட்டம்விடு விழா முடிந்து மரங்களிலும், மின்கம்பங்களிலும் மாட்டித்  தொங்கும் இக்கயிறினாலும்,  பாதிக்கப்படும் பறவைகள் ஏராளம். எத்தனை காலமானாலும் மக்காத பொருள் என்பதால், சுற்றுச்சூழலுக்கும் பெருத்த கேடு விளைவிக்கிறது.  இதன் விபரீதம் தெரியாமல், மண்ணில் வீழ்ந்து கிடக்கும் இந்தக் கயிற்றை எடுத்துச்சென்று சில பறவைகள் கூடுகட்டிப் பாதிப்புக்குள்ளாகின்றன என்கின்றனர் இயற்கைவிரும்பிகள்.

chinese manja _01
எனவே இந்தியா முழுதும் இந்த மாஞ்சாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுவருகிறது.  தமிழ்நாடு, குஜராத் உட்பட சில மாநிலங்களில் ஏற்கெனவே இந்தத் தடை அமலில் இருந்தாலும் சட்டவிரோதமாக இதன் விற்பனை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இதன் விபரீத விளைவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க  நேச்சர் ஃபார்எவர் சொசைட்டி,  அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.  சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதன் பாதிப்புகளை மக்களுக்கு அறிவுறுத்துவதுடன், இதன் இறக்குமதியையும் விற்பனையையும்  தடை செய்யக் கோரி அரசுக்கெதிராக அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டம் விடுவதற்கு மாஞ்சாக்கயிறு தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இதன் விபரீதங்களை எடுத்துச்சொல்லிப் புரிய வையுங்கள்.  இதன் விற்பனையைத் தடைசெய்யும் அரசின் உத்தரவுக்கு, உங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிப் பறவைகளை வாழவிடுங்கள்!

இதைப்பற்றி மேலும் அறிய…
http://www.natureforever.org/initiatives/banchinesemanja
http://bwcindia.org/Web/Awareness/Campaigns/KillerManja.html

Advertisements

2 thoughts on “கழுத்தறுக்கும் சீனாவின் மாஞ்சா!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s