பெண், பெண்கல்வி

இந்தியாவின் முதல் பெண் விமானி!

முதல் பெண்கள் – சர்ளா தக்ரால் (1914 – 2009)

ஞா. கலையரசி

சர்ளா தக்ரால் 1936 ஆம் ஆண்டு, ஜிப்ஸி மோத் (Gypsy Moth) என்ற விமானத்தை இயக்கி, விண்ணில் பறந்து சாதனை செய்த போது அவர் வயது 21!

விமானப் பயணம் செய்வதே கனவாக இருந்த அக்காலத்தில், அதை  ஓட்டுவதைப் பற்றிக் கற்பனை செய்ய முடியுமா என்ன?  அதுவும் துணிவும் வீரமும் மிக்க ஆண்களால் மட்டுமே முடியும் என்று நம்பிய சாகசம் மிகுந்த ஒரு துறையில், புடவை கட்டிய பெண் நுழைந்து அதைச் சாதித்துக் காட்டியது அதிசய நிகழ்வல்லவா?

இவருடைய இம்முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தவர்கள், இவர் கணவரும், மாமனாரும் ஆவர்.  இவர் கணவர் குடும்பத்தில் ஏற்கெனவே ஒன்பது பேர் விமானிகளாம்.  ஆயிரம் மணி நேரம் விண்ணில் பறந்து ‘A’ ஓட்டுநர் உரிமம் வாங்கினார் சர்ளா. அதன் பின்னர் தொடர்ச்சியாகப் பயிற்சி எடுத்து ‘B’ உரிமம் பெற்றால் தான் வணிக விமானங்களை ஓட்டமுடியும் என்பதால், ஜோத்பூரில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில், அவர் சிறிதும் எதிர்பாராதது நடந்தது.

Sarla Thakral, First Woman Pilot of India - Late 1930's

அவர் கணவர் பி.டி. ஷர்மா துரதிர்ஷ்ட வசமாக விமான விபத்து ஒன்றில் 1939 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.  அப்போது சர்ளாவுக்கு வயது 24 மட்டுமே.  மேலும் இரண்டாம் உலகப்போர் துவங்கியதால், உள்நாட்டில் விமான பயிற்சி நிறுத்தப்பட்டது.  எனவே இவர் தொடர்ந்து முயன்று மென்மேலும் சாதனைகள் நிகழ்த்த தடையேற்பட்டது.  ஆனாலும் இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெயர் இவருக்கு நிலைத்தது.

பெற்றோர் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர்.  அதற்குப் பிறகு ஓவியம், வர்ணம் தீட்டுதல் கற்றுக்கொண்டு அதிலும் புகழ்பெற்றார்.    புதிது புதிதாக உடைகள், நகைகள் டிசைன் செய்வதிலும் ஆர்வம் காட்டினார்.  நேருஜியின் தங்கை விஜயலெட்சுமி பண்டிட் இவருடைய வாடிக்கையாளர்களுள் ஒருவராம்!

இவரிடமிருந்த அசாத்திய துணிச்சலும்,  சாதிக்க முடியும் என்ற அசைக்க முடியாத தன்னம்பிக்கையுமே, அதுவரை இந்தியாவில் எந்தப் பெண்ணும் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத இச்சாதனையை இவர் நிகழ்த்தத் தூண்டுகோலாய் அமைந்தன எனலாம்.

கட்டுரை எழுத உதவிய இணைப்புக்கள்:-
https://vivchavan.wordpress.com/2007/10/17

http://www.thebetterindia.com/18871/11

“இந்தியாவின் முதல் பெண் விமானி!” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.