குழந்தைகளின் பிறந்த நாள், அல்லது குடும்ப விழாக்களில் கிண்ணங்கள் பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவை பிளாஸ்டிக்கினால் ஆனவையாக இருக்கும். அல்லது மெழுகு பூசிய காகித கிண்ணங்களாக இருக்கும். உடல்நலனில் அக்கறை கொண்ட பலரும் இவற்றை ஒதுக்கி வருகின்றனர். விழா நேரங்களில் விருந்தினர்கள் எல்லோருக்கும் தர சில்வர் தட்டுகள், கிண்ணங்கள் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஒரு மாற்றாக நாமே காகித கிண்ணங்கள் தயாரித்து பயன்படுத்தலாம். அதில் கைவேலை செய்த பயனும் இருக்கும்!
காகிதம் அல்லது அட்டைகளைக் கொண்டு, கிண்ணங்கள் செய்ய கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்.
கெட்டி அட்டை அல்லது காகிதம், அளவை, காகித மலர்கள், பென்சில், பசை…
முதலில் ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு சதுரம் அதைச்சுற்றிலும் 3 செமீ இடைவெளிக்கு மற்றொரு சதுரத்தை வரைந்து, வெளிபுறமாக இருக்கும் சதுரத்தோடு வெட்டி எடுங்கள். அதில் படத்தில் காட்டியதுபோல் ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். (கூடுதல் விவரங்களுக்கு வீடியோவைப் பார்க்கவும்)
இதை அட்டை மீது வைத்து வரைந்து வெட்டி எடுக்கவும்.
வெட்டியதை அளவை வைத்து மடித்து….
இப்படி இருக்கும்…
மடித்ததை பசையால் நான்கு புறமும் ஒட்டுங்கள். இறுதியாக அலங்கரிக்க மலர்களை ஒட்டுங்கள்.
இதோ தயாராகிவிட்டது காகித கிண்ணம்..
வீடியோவில் காண…