‘பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்’
அறிவியல் படித்தவர்கள் ஆண்-பெண் சமத்துவத்தை உணர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். மடாதிபதிகளைப் போலவும் காலம்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிய ஆணைப் போலவும் சிந்தனை கொண்டவர்கள் அறிவியலாளர்களாகவும் நோபல் பரிசு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். டிம் ஹண்ட் (Tim Hunt) பிரிட்டனைச் சேர்ந்த உயிர் வேதியியலாளர். செல்லில் உள்ள ஒரு பிரிவை கட்டுப்படுத்தும் புரத மாலிக்யூல்களை கண்டுபிடித்ததற்காக மேலும் இரண்டு அறிவியலாளர்களுடன் 2001ம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார். மிக உயர்ந்த லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக இருக்கும் டிம், கடந்த வாரம் தன்னுடைய ஆணாதிக்க முகத்தை உலகத்துக்கு காண்பித்தார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து பேசிய டிம், ‘பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு தன்னைத்தானே ஆணாதிக்கவாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். உலகம் முழுக்க உள்ள அறிஞர்கள், அறிவியலாளர்கள், பெண்ணியவாதிகள் மத்தியில் பலத்த கண்டனங்களுக்கு உள்ளான டிம், தன் பணியிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #distractinglysexy என்ற ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டது. இதில் பல அறிவியலாளர்கள் பணியிடங்களில் எப்படி இருக்கிறோம் என புகைப்படத்துடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். முன்னேறிய சமூகத்திலேயே டிம் போன்ற நோபல் அறிஞர்களே இத்தகைய பிற்போக்கு கருத்துக்களுடன் இருக்கும்போது, அதை வெளிப்படையாக சொல்லும்போது, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பணிக்குச் செல்லும் பெண்களின் நிலை எப்படிப்பட்டது என்பதை அவரவர் அனுபவமே உணர்த்தும். நோபல் ஆணாதிக்கவாதியின் திமிர் பேச்சை ஓட ஓட விரட்டிய சில அறிவியலாளர்களின் ட்விட்டர் பதிவுகள் இங்கே… இந்த ‘எதிர்கொள்ளல்’ இந்திய பெண்களுக்கும் வேண்டும் என்பதற்காக!
‘என் பாட்டி பணியிடத்தில்’ என்று நோபல் பரிசு பெற்ற dorothy Hodgkin பற்றி அவரது பேத்தி kate Hodgkin வெளியிட்ட படம்.
மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையில் drtanthony…
குழாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் DrGiuliaLanza
பேரழிவை ஏற்படுத்திய எபோலா நோய் சிகிச்சையில் மருத்துவர் Elisabetta. எபோலா தாக்கி உயிரிழந்தவர்களை காணும்போது தான் அழுததாக குறிப்பிடுகிறார்.
மண் ஆய்வியலாளர் Lorene Lynn தன் பணியிடத்தில்
கருவிகளின் சத்தத்தில் என் அழுகைச் சத்தம் கரைந்து போகிறது என்கிறார் Madison Herbert
தொல்லியலாளர் Siobhan Thompson தன் பணியிடத்தில்
கடல் வாழ் உயிரியலாளர் Angee Doerr அசாதாரண உடை, அசாதாரண பணிச்சூழலிலேகூட பெண்களை பக்கத்தில் வைத்திருந்தால் ஆண்களின் கவனம் சிதறுகிறது எனில் இந்தப் பிரச்னை பெண்களிடத்தில் இல்லை, ஆண்களிடத்தில்தான் இருக்கிறது. ஆண்களின் பழமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது, தறிகெட்டு ஓடும் கட்டுப்படுத்தமுடியாத மனதில் இருக்கிறது பிரச்னை!
நோபெல் பரிசு பெற்றவரிடத்தில் கூட இப்ப்டியொரு பிற்போக்குச் சிந்தனையா? நம்பவே முடியவில்லை. கட்டுரையாளர் கூறுவது போல பிரச்சினை பெண்களிடத்தில் இல்லை! ஆண்களிடத்தில் தான் இருக்கிறது!