இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்

குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

செல்வ களஞ்சியமே91

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சமீபத்தில் ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியின் தொகுப்பு இது. சிறு குழந்தைகளுக்கு வரும் ஆனால் அதிகம் தெரிந்திராத அதிகம் கண்டறியப்படாத நோயைப்பற்றிய கட்டுரை. செல்வ களஞ்சியம் தொடரை தொடர்ந்து படிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் என்று எழுதுகிறேன்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் பிஸிஜி தடுப்பூசி போட்டவுடன் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது புரியாத புதிராக இருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு. ஐந்தாவது குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி போட்டபட்டு அதன் நிலைமையையும் மோசமடைந்த போதுதான் அந்தப் பெற்றோர்கள் இந்த மருத்துவ மனைக்கு வந்தனர்

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அந்தக் குழந்தைக்கு PID என்று மருத்துவ மொழியில் குறிப்பிடும் (Primary Immune deficiency disorder) முதன்மை நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு நோய் இருந்ததால் live vaccine எனப்படும் பிஸிஜி தடுப்பூசியை அந்தக் குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிய வந்தது. அந்தக் குழந்தைக்கு அதன் அப்பாவிடமிருந்து எலும்பு மஜ்ஜை மாற்றீடு (bone marrow transplant) செய்தபின் குழந்தை இப்போது நன்றாக இருக்கிறது.

இந்த PID பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்காக தி ஃபவுண்டேஷன் ஃபார் இம்யூனோ டெபிஷியன்சி டிசீசஸ் (FPID) என்ற அமைப்பும், தி இண்டியன் சொசைட்டி ஃபார் ப்ரைமரி இம்யூன் டெபிஷியன்சி டிசீசஸ் (ISPID) என்ற அமைப்பும் சேர்ந்து சமீபத்தில் மருத்துவர்களுக்கான ஒரு பட்டறையை சென்னையில் நடத்தின.

Primary Immune deficiency disorder

அந்தப் பட்டறையில் PID பற்றி தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள்:

 • மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தாக்கும் பலவிதமான பரம்பரை குறைபாடுகள் பெரும்பாலும் அதிகம் ஆராய்ச்சி செய்யபடாமலேயே உள்ளன என்று இந்த பட்டறையில் கலந்துகொண்ட மருத்துவ அறிஞர்கள் கூறினர். இந்த தொற்று உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் நுரையீரல், மூளை, இரப்பை குடல் உறுப்புகள் தாக்கக்கூடியவை.
 • தீவிரமான, உயிருக்கு ஆபத்தான தொற்றுகள் திரும்பத் திரும்ப ஏற்படுவது, நுண்ணுயிர் கொல்லிகளுக்கு (antibiotics) கட்டுப்படாமல் போவது, வழக்கத்திற்கு மாறான தொற்றுக்கள் ஏற்படுவது ஆகியன இந்த PID யின் அறிகுறிகள். பிறக்கும்போதே மரபணு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு PID இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தீவிரம் குறைந்த குறைபாடுகள் 20 வயது வரை கண்டுபிடிக்கப்படாமலேயே போகலாம். அதனால் நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். இரத்தப் பரிசோதனை மூலம் இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். குழந்தை பிறப்பதற்கு முன்னாலும் இந்த நோயைக் கண்டுபிடிக்க இப்போது பரிசோதனைகள் இருக்கின்றன.
 • இந்தக் குறைபாடு பரம்பரையாக வருவதால் ஒரே குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொள்ளுபவர்களின் குழந்தைகளுக்கு அதிகம் வரக்கூடும். அதேபோல காசநோய் வர வாய்ப்பு இருக்கும் குடும்பங்களிலும் குழந்தைகளுக்கு இக்குறைபாடு இருக்கும். ஸ்டெம்செல் மாற்றீடு, ஜீன் சிகிச்சை, நரம்புவழி சிகிச்சை இவற்றின் மூலம் இக்குறைபாட்டினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
 • இந்த நோய்க்கான சிகிச்சை மிகவுல் விலையுயர்ந்தது. நரம்புவழி சிகிச்சை நான்கு வாரங்களுக்கு ஒருமுறை கொடுக்கப்பட வேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 15,000/-. குழந்தைகள் வளர வளர அதிகமான அளவில் மருந்து தேவைப்படும். விலையும் அதற்கேற்றாற்போல் உயரும். இந்த மருந்துகள் எல்லாம் இறக்குமதி செய்யப்படுபவை. இவற்றின் தேவையை உணர்ந்து அரசாங்கம் இவற்றை அத்தியாவசியமான மருந்துகள் என்ற வரிசையில் இவற்றைச் சேர்த்து நியாய விலையில் இவை கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
 • முதலில் மக்களிடையே இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு இந்த நோயும் ஒரு காரணம். இதுநாள் வரை இந்நோயை எப்படிக் கண்டறிவது என்று தெரியாமலும் மிகவும் அரிதான நோய் இது என்ற கருத்தும் இருந்தது.

PIDs என்பது என்ன?

 • இது ஒரு பரம்பரை நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு. உலகில் 50,000 நபர்களில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு பிறவியிலேயே வருகிறது.
 • அதிகார பூர்வ ஆதாரங்கள் இல்லையென்றாலும் நம்நாட்டில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடும்.
 • நோயெதிர்ப்பு போராட்டத்திற்கான மரபணுக்களின் வேலைத்திறனில் குறைகள் இருப்பின் இந்த PID உண்டாகிறது.
 • இதில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.

PID வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்:

 • நான்கு அல்லது மேற்பட்ட தொற்றுகள் காதுகளில் ஒரு வருடத்தில் ஏற்படுதல்.
 • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சைனஸ் தொற்று ஒரு வருடத்தில் ஏற்படுதல்.
 • ஆண்டிபயாடிக் மருந்துகள் உட்கொண்டும் பலனில்லாமல் போவது.
 • இரண்டு தடவைக்கு மேல்பட்டு நிமோனியா காய்ச்சல் வருவது.
 • பச்சிளம் குழந்தையின் எடை ஏறாமலிருப்பது மற்றும் வளர்ச்சி சாதாரண முறையில் இல்லாமலிருப்பது.
 • தோலின் ஆழத்தில் அல்லது உறுப்புகளின் மேல் புண் மறுபடி மறுபடி வருவது.
 • வாய் புண் திரும்பத்திரும்ப வருவது; தோலின் மேல் பூஞ்சைத் தொற்று ஏற்படுவது.
 • உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்றை நீக்க நரம்புவழி சிகிச்சை தேவை படுவது.

இந்தக் கட்டுரையை பெற்றோர்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவே எழுதியிருக்கிறேன். உங்கள் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து வர இந்த மாதிரியான கட்டுரைகள் உதவும் என்ற எண்ணத்திலேயே இதனை செல்வ களஞ்சியம் தொடரில் சேர்த்திருக்கிறேன்.

வரும் வாரம் தொடர்ந்து சிந்திப்போம்…..

“குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!” இல் ஒரு கருத்து உள்ளது

 1. இம்மாதிரி ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரைகளை யாவருக்கும் தெரியும்படியும்,
  புரியும் படியும் தமிழில் எழுதியிருப்பது மிக்க விசேஷம். இம்மாதிரி இதழ்களில் எழுதுவதால் ஏராளமானவர்கள் படித்து அறிய உதவும். இம்மாதிரி விழிப்புணர்வு கட்டுரைகள் மிக்க அவசியம். காலத்தில் அறிந்து செய்வது மிக்க உதவி. நன்றி. அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.