கண்காட்சி, செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு

வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை

கடந்த வாரம் சென்னையில் நடந்த பெண் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பெண்கள் தங்களுடைய நாளில் சிறு பகுதியை ஒதுக்கி, அதில் தங்களுக்குப் பிடித்த கைவேலைகள் செய்து, அதை விற்கக் கூடிய நிலைக்கு உயர்ந்தவர்களே.  தாங்களும் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவற்றை எப்படி விற்பது யாருக்கு விற்பது என்கிற தயக்கம்தான் பல பெண்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர விடுவதில்லை.

இந்த தயக்கத்தை உடைக்க பெண்கள் பங்கேற்கும் இதுபோன்ற கண்காட்சிகளுக்கு சென்று பாருங்கள். உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்ட கண்காட்சியில் இடம்பெற்ற சில பெண்களிடம் பேசினேன்.

அரங்கின் நுழைவாயில் அருகே மலர்ச்சியுடன் தன் கைவேலைப்பாடுகளுடன் நின்றிருந்தார், அந்த முதிய பெண் ருக்மணி குரலில் நடுக்கம் இருந்தால் அவர் மனதளவில் திடமான பெண்ணாகவே தெரிந்தார். பத்திக் பிரிண்ட் செய்யப்பட்ட புடவைகள், பல கடவுளர்களின் தஞ்சாவூர் ஓவியங்கள் என அவர் கடையில் பொருட்கள் நிறைந்திருந்தன. ஃபேஷன் நகைகளையும் இவர் விற்பனைக்கு வைத்திருந்தார். தஞ்சாவூர் ஓவியங்கள்தான் என்னுடைய சிறப்பு என சொல்லும் ருக்மணியை 9444384583, 9987915249 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளிச் செல்லும் வயதில் குழந்தைகள் உள்ள ஹரித்ரா, வளையல்களில் மணி வேலைப்பாடு செய்வதில் கைத் தேர்ந்தவர். அழகிய நிறங்களில் அவர் நெய்த மணி வளையல்களை காட்சிக்கு வைத்திருந்தார். அதோடு பேட்டரியால் ஒளிரும் வண்ணம் பூசப்பட்ட அகல் விளக்குகளையும் அவர் செய்கிறார். அவரை 97907 26172, 9952951084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இன்னும் சிலரின் கடைகளுக்கு அடுத்த பதிவில் செல்லலாம்…

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.