சமீபத்தில் சென்னை லலித்கலா அகாடமியில் இந்தோ கொரியன் கலைஞர்களின் செராமிக் கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு கலைஞர் குத்துவிளக்கின் அடிப்பாகத்தைப் பயன்படுத்தி மேலே செராமிக்கால் ஆன தட்டுகளால் அலங்கரித்திருந்தார். தட்டின் மேல் கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பார்க்க மிக அருமையாக இருந்தது.
குத்துவிளக்கின் மேல் செராமிக் தட்டு வைத்துக் கோலங்கள் போட்டிருப்பது புதுமை. இதுவரை பார்த்திராத கலைப்பொருட்கள்! மிகவும் அருமை!