அறிவியல், அறிவியல் எழுத்து, இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையே அன்பை வளர்க்கும் குரோமோசோம்!

செல்வ களஞ்சியமே – 86

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

தாத்தா பாட்டி இருவருள் பாட்டி சுலபமாக பேரன் பேத்திகளுடன் ஒன்றிவிடுவாள். ஏற்கனவே அம்மா பாத்திரம் செய்தவளாயிற்றே. இந்த உறவு வெறும் பாசத்தினாலோ அன்பினாலோ மட்டும் வருவதில்லை என்கிறது ஒரு ஆராய்ச்சி.

பாட்டியைப் பற்றி ஒரு ஆராய்ச்சியா என்று வியப்பாக இருக்கிறதா? ஆமாம். பாட்டிக்களுக்கும் பேரன் பேத்திகளுக்கும் மரபணு ரீதியாக மிகுந்த தொடர்பு இருப்பதாக சொல்லுகிறது இந்த ஆராய்ச்சி. எல்லா வீடுகளிலும் பாட்டிகள் புதிய தாய்மார்களுக்கு இளம் குழந்தைகளை வளர்க்க உதவுவதை நாம் பார்க்கிறோம். இன்னொன்றையும் நாம் கவனிக்கலாம் அதாவது தாய்மார்களைவிட பாட்டிமார்கள் மிகுந்த உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். அடுத்த தலைமுறையை நன்றாக உருவாக்கவே இயற்கை பெண்களுக்கு மெனோபாஸ் என்ற வரத்தை கொடுக்கிறது என்று ஒரு கூட ஒரு புனைவு (hypothesis) நீண்டகாலமாக இருந்து வருகிறது. மெனோபாஸ் முடிந்த பெண்களுக்கு அவர்களது ஆரோக்கியத்தில் ஒரு முன்னேற்றம் இருக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி சொல்லுகிறது.

பாட்டி வேண்டுமா? இந்தக் கேள்விக்கு ஆம் என்பதைத் தவிர வேறு பதிலே இருக்க முடியாது. மற்ற விலங்குகளைப் போலில்லாமல் மனிதக் குழந்தைகள் தாங்களாகவே தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது. நீண்ட காலத்திற்கு அம்மாவை சார்ந்திருக்கின்றன. இன்னொரு தனித்துவமும் மனித குலத்திற்கு உண்டு. அதாவது 3 வருடங்களுக்கு ஒருமுறை குழந்தை பிறக்கும் வாய்ப்பு. இதன் காரணமாக பாட்டியின் தேவை இன்னும் அதிகமாகிறது. புதிதாய் பிறந்திருக்கும் குழந்தையை அம்மா பார்த்துக் கொண்டால் முன்னால் பிறந்திருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பாட்டி!

தான்சானியா நாட்டில் வாழும் ஒரு வேட்டையாடும் பழங்குடியினர் இடையே மானுடவியலாளர் கிறிஸ்டன் ஹாக்ஸ் என்பவர் 1980 ஆம் வருடம் ஒரு ஆய்வு நடத்தினார். அந்த இனக் குழந்தைகளுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுத்து அவர்களைப் போஷித்துப் பாதுகாப்பது அவர்களின் பாட்டிமார்கள் தான் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது.

இந்த ஆய்வுக்குப் பிறகு 2004 இல் பின்லாந்து நாட்டில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் படி மெனோபாஸ் முடிந்து நீண்ட நாட்கள் வாழும் பாட்டிகளுக்கு நிறையப் பேரக் குழந்தைகள் இருக்கிறார்களாம். பாட்டியின் சீராட்டல் பேரக்குழந்தைகளை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் வைக்கிறதாம்.

paati

பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையேயான மரபணு தொடர்பு கூட மிகவும் சுவாரஸ்யமானது. இந்த அறிக்கை Proceedings of the Royal Society, Series B, Biological Sciences இல் வெளியானபோது மிகப்பெரிய அளவில் பதிவிறக்கம் செய்யப்பட 10 கட்டுரைகளில் இதுவும் ஒன்றாக இருந்ததாம். தங்களை வளர்த்து ஆளாக்கும் பாட்டிகளிடம் பேரன் பேத்திகள் அலாதியான அன்பும், பாசமும் காட்ட இன்னொரு காரணம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் மரபணுத் தொடர்பு.

எல்லாப் பெண்களுக்கும் இரண்டு X குரோமோசோம்கள் உண்டு. ஆணுக்கு ஒரு X குரோமோசோம் ஒரு Y குரோமோசோம் இருக்கின்றன. ஒரு ஆண்மகன் தன் தாயிடமிருந்து கிடைக்கும் ஒரே ஒரு X குரோமோசோமை தன் மகளுக்குக் கொடுக்கிறான். இதனால் தந்தை வழிப் பாட்டி தனது பேத்திகளுடன் 50% X குரோமோசோம் தொடர்புடையவள் ஆக இருக்கிறாள். ஆனால் தன் பேரன்களுடன் (பெண்களுக்கு Y குரோமோசோம் இல்லாததால்) எந்தவித குரோமோசோம் தொடர்பும் அற்றவளாக இருக்கிறாள். தாய்வழிப் பாட்டி தன் பேரன் பேத்திகளுடன் ஒரே சீராக 25% X குரோமோசோம் தொடர்புடையவள் ஆக இருக்கிறாள். மரபணுத் தொடர்பு பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் 23% லிருந்து 31% வரை இருக்கிறது. ஏன் X குரோமோசோம்? நமது மரபணுக்களில் 8% இந்த X குரோமோசோம்களால் ஆனது. குழந்தைப் பேறும் இதில் அடக்கம்.

ஆனால் வெறும் மரபணுத் தொடர்பை மட்டும் வைத்து பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா? இல்லை. குழந்தைகள் வாழும் சூழ்நிலை, அவர்களது கலாச்சாரம் இவையும் கூட உறவுகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன என்பதுவே நிஜம். பாட்டி சொல்லைத் தட்டாதீர்கள் குழந்தைகளே!

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் வாசெடா பல்கலை கழகப் ஆசிரியர் திரு யாசுயுகி ஃபுகுகவா வெளியிட்ட ஆய்வு அறிக்கை தந்தை வழி பாட்டியை பற்றி இன்னொரு செய்தியை சொல்லுகிறது. தந்தை வழிப் பாட்டியின் செல்வாக்குத்தான் குழந்தைகளின் வாழ்வில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறதாம். மகன்களுக்கு விரைவில் முதல் குழந்தை பிறப்பதற்கும், முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையில் அதிக இடைவெளி இல்லாமல் இருப்பதற்கும் தாய் வழிப் பாட்டிதான் காரணம் என்கிறது. ஏனெனில் ஜப்பான் நாட்டிலும் நம்மூரைப் போல மருமகள் மாமியாருடன் வாழ்கிறாளாம்.

நியுஜெர்சியில் இருக்கும் டாக்டர் டாம் வாட்ஸ் கூறுகிறார்: உங்கள் குழந்தைகளை நீங்கள் ஒரு சிற்பம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த சிற்பத்தை வடிப்பதில் உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும் நிறைய பங்கு இருக்கிறது. நீங்கள் அந்த சிற்பத்தை மிகச் சிறந்ததாக உருவாக்க சின்ன சின்ன செதுக்கல்கள் செய்யலாம். ஆனால் தாத்தா பாட்டிகளின் திறமையான செதுக்கல்கள் இல்லாமால் குழந்தை என்கிற சிற்பம் முழுமை அடையாது’!

(தொடரும்)

 

“பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையே அன்பை வளர்க்கும் குரோமோசோம்!” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. தன்னுடைய குழந்தைகளைவிட பேரன் பேத்திகளுக்கு,நேரத்தைத் தாராளமாகச் செலவிடமுடிகிறது. பலவிதங்களிில் கதைகளைப்போல் சொல்லி போதிக்க முடிகிறது. குரோமோஸெம்களைப்பற்றி அதிகம் தெரியாவிட்டாலும்,இணைந்து வாழ்வதில் அதிகம் எல்லா விதத்திலும் பலன் இருதரப்பிலும் தெரிகிரது. நல்ல விஷயங்களைத் தெரிவிக்கும் உன் கட்டுரையை வரவேற்கிறேன். தெரிந்து தெரியாத விஷயங்களைத் தெரிவிக்கும் கட்டுரை. பாட்டி,தாத்தாக்களின் பெருமை,அருமை. அன்புடன்

  2. மிக அருமையான பகிர்வு ரஞ்சனி என் பாட்டிக்கு நான் செல்ல பேத்தியாகத்தான் வளர்ந்தேன் இப்போது என் சின்னுவுக்கு நான் தான் அவன் செல்லப்பாட்டி விஞ் ஞான பூர்வமாகவும் இதற்கு விளக்கம் இருப்பது அறிய சந்தோஷம் நல்ல பகிர்வு பாராட்டுக்கள் தொடருங்கள் படிக்கலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.