கான்கிரீட்டில் தொட்டிகள் உருவாக்குவது குறித்து நாம் பார்த்தோம். கான்கிரீட்டில் அழகான கலைப் பொருட்களையும் உருவாக்க முடியும். அதற்கொரு உதாரணம்தான் டைனிங் டேபிளை அழகூட்டும் இந்த கலைப்பொருள்!
பயன்படுத்திய இனிப்பு பெட்டிகளை வைத்து, அதை கான்கிரீட்டால் நிரப்பி, தொட்டிகள் செய்யலாம். வழிமுறை இங்கே… இவற்றை அழகூட்ட கடற்கரைகளில் சேகரித்த சங்குகளை வைத்து அலங்கரிக்கலாம். தயாரான கான்கிரீட் தொட்டியை டைனிங் டேபிளில் வைப்பதற்கு ஏற்ற வகையில் மாற்ற வண்ணம் பூசப் போகிறோம். அதற்கு மெட்டாலில் அக்ரலிக் நிறங்கள் பொருத்தமாக இருக்கும். வண்ணம் பூச தட்டையான பிரஷ் எடுத்துக் கொள்ளவும்.
காப்பர் நிறக் கலவையை அடிப்பாகத்தில் பூசுங்கள்.
மேல் பாகத்தில் கோல்டு நிறத்தால் நிரப்புங்கள்.
இதோ தயாராகிவிட்டது டைனிங் டேபிளை அலங்கரிக்கப் போகும் அழகிய கலைப் பொருள். இதில் பூக்களால் நிரப்பியோ, அல்லது வண்ண கூழாங்கற்களை நிரப்பியோ முழுமைப் படுத்தலாம். உணவு மேசையில் தான் என்று இல்லை வீட்டின் எந்த இடத்திலும் இதை வைத்து அலங்கரிக்கலாம்!
பயனுள்ள தகவல்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்