இன்றைய முதன்மை செய்திகள், செய்து பாருங்கள், வீடு பராமரிப்பு, வீட்டை அலங்கரித்தல்

சங்கு, சிப்பிகளை சேகரித்ததுண்டா?

ஒவ்வொரு அலைக்கும் ஒரு சங்கதி சொல்லும் கடலை ரசிக்காமல் இருக்க முடியாது. கடலை மட்டுமா, கரையெங்கும் பரந்து கிடக்கும் மணலை, மணலில் புதைந்திருக்கும் விதம்விதமான சங்கு, சிப்பிகளை ரசித்திருப்போம். ரசித்ததை சிலர் வீடு வரை எடுத்து வருவதுண்டு. சில நாட்களில் அவை குப்பைக்குப் போய்விடும் என்பதுதான் இறுதியாக வரும் பரிதாபம். சங்கு, சிப்பிகளை இனம் வாரியாக பிரித்து பராமரிக்கும் வழக்கம் மேலை நாடுகளில் உண்டு. சங்கு, சிப்பி சேகரிப்பதற்கென்றே அவர்கள் கடற்கரைகளைத் தேடி பயணப்படுவதுண்டு. இது பணக்காரர்களுக்கான பொழுதுபோக்கு என்று நினைக்கத் தேவையில்லை. இது மனம் படைத்தவர்களுக்கான பொழுதுபோக்கு. எப்படியெனில், சங்கு-சிப்பிகளை சேகரிப்பதன் மூலம் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த அறிவைப் பெருகிறோம், அவற்றை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறோம். மனதுக்கு மகிழ்வான பொழுதுபோக்கு. அடுத்தது சேகரித்தவற்றை வீட்டு அலங்கார பொருட்களாகவும் பயன்படுத்தலாம். சில உதாரணங்கள் படங்களாக…

DSCN0774

DSCN0775

சிப்பிகளை கண்ணாடி குடுவைக்குள் இட்டு அழகுபடுத்தலாம், பெரிய சிப்பிகளில் மலர் அலங்காரம் செய்யலாம். குழந்தைகளின் ஓய்வு நேரத்தில் சங்கு சிப்பிகளை வண்ணம் தீட்டச் சொல்லி அவர்களின் கற்பனை கதவுகளை திறந்துவிடலாம். என்ன… இனி கடற்கரைக்குப் போனால் கைகளில் சிப்பிகளோடு திரும்புவீர்கள்தானே!

“சங்கு, சிப்பிகளை சேகரித்ததுண்டா?” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.