அரசியல், இந்தியா, தமிழ்நாடு, மனிதநேய மக்கள் கட்சியின்

மோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள்!

மோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள் என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ’டெல்லி சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜரிவால் அவர்களுக்கும் அவரது கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லி தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் போது மதம், சாதி, மொழி மற்றும் பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் மோடியின் 8 மாத கால ஆட்சிக்கு எதிராக இத்தேர்தலில் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.நரேந்திர மோடி – அமீத் ஷா ஜோடி சந்தித்த முதல் பின்னடைவாக டெல்லி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s