பிளாஸ்டிக் பைகளின் சீர்கேட்டைக் குறைக்க பேப்பர் பைகளை உபயோகிக்கும்படி சூழலியல் ஆர்வலர்கள் தீராத பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இதை ஏற்றுக் கொண்டாலும் பேப்பர் பைகளின் விலை கட்டுப்படியாவதில்லை. எந்த ஒரு பொருளுமே புதிதாக அறிமுகமாகும்போது விலை அதிகமாகத்தான் இருக்கும் என்பது நுகர்வின் வரலாறு. தொழிற்நுட்பம் உள்ள நுகர்பொருட்களை தயாரிப்பதில் நமக்கு சிக்கல் இருக்கலாம், பேப்பர் பை தயாரிப்பதில் நமக்கு என்ன சிக்கல்? இதோ பேப்பர் பை செய்ய எளிய வழியில் சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். பேப்பர் பைகள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டுமல்ல முயற்சி செய்தால் பேப்பர் பைகள் செய்வதை சிறு தொழிலாகவும் செய்யலாம். அதற்கான தூண்டுகோளாக இந்த பதிவு…
சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்…
தேவையான பொருட்கள்; கனமான அட்டை, பெயிண்ட் செய்ய அக்ரலிக் கலர்கள், தட்டை & உருண்டையான பிரஷ், க்ளிட்டர் நிறங்கள், வண்ணக் கயிறு, மணிகள், பென்சில், கத்தரிக்கோல்.
அட்டையை செவ்வக வடிவில் வெட்டவும். அதன் ஒரு புறத்தில் உங்களுக்கு விருப்பமானதை வரையவும். ஒன் ஸ்ட்ரோக் பெயிண்டிங்கில் எளிதாக எல்லோரும் வண்ணம் தீட்டலாம். ஒரு தட்டையான பிரெஷ்ஷில் ஒரு பக்கம் வெளிர் நிறம், ஒரு பக்கம் அடர் நிறத்தை நிரப்பிக் கொள்ளுங்கள். வெளிர் நிறத்தை உள்பக்கமாக வைத்து ஒரு இதழ் வரையுங்கள். (செய்முறை விடியோவில் தெளிவாக தரப்பட்டுள்ளது.)இதுபோல ஓன் ஸ்ட்ரோக் பெயிண்டிங்கில் அழகான ஓவியங்களை உருவாக்கலாம்… நடுநடுவே உருண்டையான பிரெஷ்ஷில் பச்சை நரம்புகளை வரையலாம் இப்படி…வரைந்து முடித்த வண்ணங்கள் உலர்ந்ததும் இரண்டாக மடித்த செவ்வகத்தின் நீள் பக்கத்தின் ஒரு முனையை ஒரு செ,மீ அளவுக்கு மடிக்கவும். அடுத்த முனையில் தலா ஒரு செ.மீ அளவுக்கு இரண்டு அடுத்தடுத்த மடிப்புகளை மடிக்கவும். (விடியோவில் விளக்கமாக)
மடக்கிய இரண்டு நீள் பக்கத்தையும் ஒட்டவும். இப்போது ஒட்டப்படாத பை போன்ற அமைப்பு கிடைக்கும்இதன் ஒரு பக்கத்தை புத்தகத்துக்கு அட்டைப் போடுவது போல வெட்டி ஒட்டுங்கள்.இறுதியாக வண்ணக் கயிறுகளில் மணிகள் இணைத்து ஒட்டப்படாத மேல் பாகத்தின் இரு புறமும் இணைக்கவும். இதோ அழகிய பேப்பர் பை தயார்!