“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மதச்சார்பற்ற, ஜனநாயக முன்னணி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
விஜயவாடாவில் தொடங்கிய ஆந்திரப் பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு நாள் மாநாட்டில் அவர் இது குறித்து பேசினார்…
‘தனியார்மயத்தை ஊக்குவித்தல், அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்நடவடிக்கைகள், நாட்டில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார, சமூக ரீதியாகவும் பிரச்னைகளை உருவாக்கும்.
இந்தப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் திட்டத்துடனேயே, மக்களிடையே வகுப்பு மோதல்களை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸூம் தூண்டிவிட்டு வருகின்றன.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்களிடையே மத்திய அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த 9 மாத காலத்தில், மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீர்திருத்தம் செய்தால்தான், தேர்தலில் பணப்புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் விளம்பரங்களுக்காக பாஜக பெரும் அளவில் செலவு செய்தது. இதுபோன்ற நடவடிக்கையால், ஜனநாயகம் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும்.
ஒபாமாவின் இந்திய வருகையால், பலனடைந்தது அமெரிக்காதான். 2008ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதில் இருந்து அமெரிக்காவால் வெளிவர முடியவில்லை. ஆகையால், அமெரிக்க முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் திட்டத்துடனேயே இந்தியாவுக்கு ஒபாமா வந்தார். அமெரிக்கர்களின் முதலீடுகளை அதிகரிப்பதே, அவரது இந்திய வருகையின் நோக்கமாகும்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், விவசாயம் உள்பட அனைத்து துறைகளிலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு பிரதமர் மோடி அனுமதி அளித்துவிட்டார். மோடியின் இந்த நடவடிக்கையால், நமது நாட்டின் நலன்கள்தான் பாதிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத மசோதாக்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும் என்றார் யெச்சூரி.
கியூபாவுடன் அரைநூற்றாண்டு பகையை தள்ளி வைத்து நட்பு பாராட்டுவது …..!
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பது …
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு என்பது போல ஹிலாரி கிளிண்டன் அடுத்த அமெரிக்க அதிபராக வந்தால் உலக நாடுகள் அனைத்தும் நேசநாடுகளாக மாறினால் சிறப்பான மகத்துவமன்றோ……