ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டி உடைந்ததில் அருகில் இருந்த தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். வாணியம்பாடி அருகே ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலையில் நேற்றிரவு மறு சுழற்சி செய்யும் ஆலையில் உள்ள கழிவு நீர் குழாய் வெடித்தது. அப்போது கழிவு நீர் தொட்டியின் சுற்றுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகே உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் பலியாகினர். பலியானவர்களில் 9 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்த விபத்துக்கு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கழிவு நீரை தொட்டியில் சேமித்து வைத்திருந்ததே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்கு காரணமான ஆலை நிர்வாகத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.