ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் ஷாஜியா இல்மி. இவரையும், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியையும் ஒப்பிட்டு, முன்னாள் பத்திரிகை கவுன்சில் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியை விட அழகாக உள்ளார். ஆகையால் கிரண்பேடிக்கு பதிலாக ஷாஜியா இல்மி நிறுத்தப்பட்டால் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று கூறியுள்ளார்.