பத்ம விருதுகள் 2015
கலை, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் திலீப்குமார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட 9 பேருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்படுள்ளது.
முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மிலின்டா கேட்ஸ் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவில், கன்னியாகுமரி அவசரலா ராஜா ராமன், விளையாட்டுத் துறையில் பி.வி.சிந்து, சாரதா சிங், அருனிமா சின்ஹா உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 104 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.