அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

இன்று 66-வது குடியரசுத் தினம்!

Republic Day-Paradeநாட்டின் 66-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக, முப்படைகளைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவலர் படைகளின் அணிவகுப்பும் இடம்பெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிசெல் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, வரவேற்றார். பிரணாப் முகர்ஜி கொடியேற்றியதை அடுத்து அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான அசோக சக்ரா விருதினை அவரது மனைவி இந்து குடியரசு தலைவரிடமிருந்து  பெற்றுக் கொண்டார்.கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதியன்று காஷ்மீர் எல்லைப் பகுதியில், பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். இதே போல நீரஜ்குமார் சிங் என்ற ராணுவ வீரர் கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர்நீத்தார்.

தமிழகத்தில் கொண்டாட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ரோசய்யா மூவர்ணக் கொடியை ஏற்ற, முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர். இதனை அடுத்து முப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படை ஊர்திகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதக்கங்களை வழங்கினார்.

சிவகுமார், பழனிவேல்ராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த துல்கருணை பாட்சாவிற்கு மத நல்லிணக்கப் பதக்கமும், மது ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக 4 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டன.இதே போல வேளாண் துறை சிறப்பு விருது, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துரைசாமிக்கு வழங்கப்பட்டது. பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கரகாட்டம்,கும்மியாட்டம், தம்புரா நடனம், கோலாட்டம் என நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s