தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோன்றியதல்தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உறுவாகியுள்ளனர் என மீஞ்சூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசும்போது மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னால் பால்வளத்துறை அமைச்சரும், திமுக ஆதிதிராவிட மாநில நலக்குழு செயலருமான க.சுந்தரத்தின் மகன் டாக்டர் க.சு. செந்தில் ராஜ்குமார், டாக்டர் ரா.தீப்திகிருஷ்ணாவுக்கும் மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இருவரின் திருமணத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி வைத்து பேசியது. திராவிட கட்சிகளை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றது. ஆனால் யார் நினைத்தாலும் திமுகவை அழிக்க முடியாது’என கூறினார்.