ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 6வது தொடரில் சூதாட்டம் நடைபெற்ற வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதில் குருநாத மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி என்றும், இந்திய கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டவை என்றும் தெரிவித்துள்ளனர். சீனிவாசன் பிசிசிஐ தலைவராகவும் ஐபிஎல் அணி உரிமையாளராகவும் இரட்டைப் பதவி வகித்ததன் மூலம் லாப நோக்கிலான இரட்டை நலன்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டார் என்றும் எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியும் வணிக நலன்களை வைத்துக் கொள்ள முடியாது.வணிக நோக்கம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றால், அவர்கள் பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பர் என்றும் தெரிவித்துள்ளனர்.