அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: ஜெ.அனுதாபம் வளர்மதிக்கு வெற்றியைத் தருமா?

jaya valar
ஜெயலலிதாவுடன் வளர்மதி

 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து, முதலமைச்சர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மிகுந்த இழுபறிக்கிடையில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இன்று தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் வரும் 27-ம் தேதியோடு முடிகிறது.  29ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற 30-ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 13-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 16-ம் தேதியும் நடைபெறுகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.  திமுக சார்பில் என். ஆனந்தனும் அதிமுக சார்பில் எஸ். வளர்மதியும் போட்டியிடுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் ஒதுங்கியிருந்த திமுக, அதிமுக தலைமையின் தற்போதைய பலவீனத்தைப் பயன்படுத்தி தன் பலத்தை சோதிக்க ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கியிருக்கிறது. சென்ற 2011 தேர்தலில் 63480 வாக்குகள் பெற்ற என்.ஆனந்தன் ஜெயலலிதாவிடம் 41848 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஜெயலலிதா 105328 வாக்குகள் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் ஜெயா மீதான அனுதாபம் காரணமாக அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றிபெற வாய்ப்பு இருந்தபோதும் 1 லட்சம் வாக்குகள் அவர் பெறுவது கடினம்தான். அதே நேரம்  இடைத்தேர்தலில் தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்னர் வேட்பாளரை அறிவிப்பதாக, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.  இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளும் கட்சிகளே தங்கள் அதிகார பலத்தால் வெற்றி பெறும் என்று அவர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் சுயேட்சைகளும் போட்டியிடுகிறார்கள். சமூக சேவகர் டிராபிக் ராமசாமியும், ஸ்ரீரங்கத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். வருகிற 23–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். ,

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s