ஃபேஷன் ஜுவல்லரி பற்றி ஆர்வமுடன் நிறைய பெண்கள் நம்மிடம் கேட்கிறார்கள். அவர்களுக்காக சில நுணுக்கங்களை கற்றுத்தர இருக்கிறோம். ஃபேஷன் ஜுவல்லரி செய்வதில் மேற்கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்ய விரும்பினால் கம்பி முடுக்குதல் (wire wrapping) பற்றி தெரிவது அவசியம்.
கம்பி முடுக்குதலில் ஆரம்ப கட்டமாக வளையங்கள், காதணி ஹூக்குகளை வைத்து காதணிகள், பிரேஸ்லெட்டுகள் செய்து பழகலாம். pliers வைத்து வெவ்வேறு விதங்களில் இவற்றை செய்து பழகலாம். pliers பயன்படுத்த நல்ல பயிற்சி இது! இதோ மாதிரிக்கு இந்த காணோலியைக் காணுங்கள்…
அடுத்ததாக, காப்பர் கம்பிகள், மணிகள் வைத்து முடுக்குவது ஃபேஷன் ஜுவல்லரியில் அடுத்த கட்டத்தை அடைய உதவும். வெறுமனே இவற்றை வைத்து உருவாக்கும் இந்த மணிமாலைகள் பழைய உத்தியில் உருவாக்கப்படுபவை. ஆனால் இங்கே கம்பி முடுக்குதல் அடிப்படைக்காக இவற்றை கற்பது அவசியம். இந்த அடிப்படையை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியில் உங்களுக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கலாம். இதோ இந்த விடியோ உங்களுக்கு பயனாக இருக்கும்.