நடிகர் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிஸ்ஸி. மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ள லிஸ்ஸி, பிரபல இயக்குநர் பிரியர்தஷனை திருமணம் செய்துகொண்டு சென்னையில் குடியேறினார். சென்னையில் உள்ள 4 ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரை நிர்வகித்து வந்த இவர், கணவர் பிரியதர்ஷனை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். “24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் திரு. பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள். இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்” என்று நடிகை லிஸ்ஸி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.