சாமி படம் என்றால் ‘ஏ’ ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வருகிறது. அதை கங்காரு உடைக்கும் என்கிறார். பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கும் ‘கங்காரு’வில் நாயகனாக அர்ஜுனா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
முந்தைய படங்களைப் பார்த்து அவரது அம்மாவே ”இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு’ என்று திட்டியதாக சொல்லும் சாமி, கங்காரு என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும்.. இது வரையிலான என் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும் என்று கூறுகிறார். அதனை உறுதி செய்யும் விதமாக படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் கங்காருவுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அழுத்தமான கதையில் பல இடங்களில் கண்ணீரையும் வரவைக்கிறார் என்று பாராட்டியும் உள்ளதாக தெரிவிக்கும் படக்குழு இதனால்
கோலிவுட்டில் படத்தின் மேல் எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக சொல்கிறது.