பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் கானா பாடகராக அட்டி படத்தில் நடிக்கிறார். நாயகியாக அஸ்மிதா நடிக்க ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும்,நான் கடவுள் ராஜேந்திரன்,அருள்தாஸ்,ராம்ஸ்,அழகு,கலை,மிப்பு,தங்கதுரை,யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு கதை,திரைக்கதை,வசனம்,எழுதி இயக்கியுள்ளார் விஜயபாஸ்கர்.
‘சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் எதார்த்ததை மிகவும் சுவாரஸ்யமானதாக கூறும் வகையில் ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டிருக்கும் படமே அட்டி’ என்கிறார் இயக்குநர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது அட்டி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜீன், இசை சுந்தர்.சி.பாபு, எடிட்டிங் M.V.ராஜேஷ்குமார், நடனம் சுரேஷ், தயாரிப்பாளர்கள் Dr.J. ஜெயகிருஷ்ணன், ஆ.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கின்றனர்.