உயிரும் மெய்யும் கலந்ததுதான் நம் மனித வாழ்க்கை. நமது உடலுக்கு உபாதைகள் வரும் போது உயிருக்கு ஆபத்து இல்லாமல் மருத்துவம் செய்து காப்பாற்றுவது டாக்டர்களின் கடமை. அந்த டாக்டர்களின் வாழ்விலும், தொழிலிலும் வரும் பிரச்னைகளை அவர்கள் எப்படி வெற்றி கொள்கிறார்கள் என்பதை சொல்கிற உயிர் மெய் தொடர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமலாவின் நடிப்பில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர் வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரபாகவுள்ளது. இயக்குநர் ப்ரியாவின் இயக்கத்தில் வெளியான இந்தத் தொடர் 25ஆவது எபிசோடில் இருந்து இயக்குனர் சுந்தர் கே விஜயன் இயக்கத்தில் பல திருப்பங்களுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிப்பரபாகி வருகிறது.
இந்தத் தொடரில் அமலாவுடன், பரத்கல்யாண், கிரிஷ், ராஜா, ரேவதி சங்கர், துர்கா, பிரவின் வினித், ஸ்ருத்திகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
வசனம் – வெற்றி செல்வன்
கதை மற்றும் திரைக்கதை – பத்ரி வெங்கடேசன்
ஒளிப்பதிவு – எம் ராஜா
தயாரிப்பு – ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அரவிந்த்.