அரசியல், தமிழ்நாடு

ஜெயலலிதா தகுதியிழப்பு செய்யப்பட்டதாக அறிவித்த சட்டப்பேரவைச் செயலாளர் பதவி நீக்கம்

jamaluddin

ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முறைகேடாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தவிட்டது.  இதனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக 12-11-14 (புதன்கிழமை) அன்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைச் செயலாளர் பதவியிலிருந்து ஜமாலுதீன் திடீரென நேற்று (14-11-14) வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை செயலாளரான ஜமாலுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு மேலும் 5 ஆண்டுகாலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் 2017ஆம் ஆண்டு வரை ஜமாலுதீன் அப்பதவியில் நீடிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s