அரசியல், இந்தியா

மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை : முழு பட்டியல்!

new min

மத்தியில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நிதித் துறையுடன் பாதுகாப்புத் துறையையும் அருண் ஜேட்லி கவனித்து வந்தார். ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக செய்தி, ஒலிபரப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை அமைச்சராக இருந்த சதானந்த கெளடா, சட்டம், நீதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே துறையின் புதிய அமைச்சராக சுரேஷ் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ரவிசங்கர் பிரசாத் வசம் சட்டத் துறை இருந்தது. தற்போது தகவல், தொழில்நுட்ப அமைச்சர் பொறுப்பு ரவிசங்கர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ வர்தன் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டாவுக்கு சுகாதாரத் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகியவருமான வீரேந்தர் சிங்குக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர்த் துறை வழங்கப்பட்டுள்ளது.

திறன் வளர்ப்பு, தொழில்முனைவோர் நலத் துறையின் இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) ராஜீவ் பிரதாப் ரூடியும், சிறுபான்மையினர் நலன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு புதிய இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை அவர் பதவி வகித்து வந்த கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்குப் பதிலாக, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை இணையமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மட்டும் தனிப்பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையமைச்சர் பொறுப்பில் கூடுதலாக கவனித்து வந்த நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறையில் இருந்து நிர்மலா சீதாராமன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நரேந்திர மோடி –   பிரதமர்

ராஜ்நாத் சிங்   – உள்துறை

சுஷ்மா ஸ்வராஜ்  –  வெளியுறவுத்துறை மற்றும் அயல்நாட்டு விவகாரங்கள்

அருண் ஜேட்லி  –  நிதி, கம்பெனி விவகாரங்கள்,செய்தி ஒலிபரப்பு

எம்.வெங்கய்யா நாயுடு  –  நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரங்கள்

நிதின் கட்கரி  –  சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்

மனோகர் பாரிக்கர்  –  பாதுகாப்புத்துறை

சுரேஷ் பிரபு  –  ரயில்வே துறை

டி.வி.சதானந்த கௌடா  –  சட்டம் மற்றும் நீதித்துறை

உமா பாரதி  –  நீர்வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை சுத்திகரிப்பு

நஜ்மா ஏ. ஹெப்துல்லா  –  சிறுபான்மையினர் நலத்துறை

ராம்விலாஸ் பாஸ்வான்  –  நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம்

கல்ராஜ் மிஸ்ரா  –  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

மேனகா காந்தி  –  பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை

அனந்த்குமார்  –  ரசாயனம் மற்றும் உரங்கள்

ரவிசங்கர் பிரசாத்  –  தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஜகத் பிரகாஷ் நட்டா  –  சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

அசோக் கஜபதி ராஜு  –   சிவில் விமானப் போக்குவரத்து

அனந்த் கீதே  –  கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

ஹர்சிம்ரத் கௌர் பாதல் –   உணவு பதனிடுதல் தொழில்கள்

நரேந்திர சிங் தோமர்  –  சுரங்கங்கள், எஃகு

சௌத்ரி பிரேந்தர் சிங்  –  ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் சுகாதாரம்

ஜுவல் ஒரம்  –  பழங்குடியினர் நலத்துறை

ராதா மோகன் சிங்  –  விவசாயம்

தாவர் சந்த் கெலாட்  –  சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை

ஸ்மிருதி இரானி  –  மனிதவள மேம்பாடு

ஹர்ஷ்வர்தன்  –  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணை அமைச்சர்கள்

ஜெனரல் வி.கே.சிங்  –  புள்ளியியல், திட்ட அமலாக்கம் (தனிப்பொறுப்பு)} வெளியுறவுத்துறை விவகாரங்கள்

இந்தர்ஜித் ராவ்  –  திட்டமிடல் (தனிப்பொறுப்பு), பாதுகாப்பு

சந்தோஷ்குமார் கங்வார்   –  ஜவுளித்துறை (தனிப்பொறுப்பு)

பண்டாரு தத்தாத்ரேயா  –  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப்பொறுப்பு)

ராஜிவ் பிரதாப் ரூடி  –  திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிப்பொறுப்பு)

ஸ்ரீபாத் எஸ்úஸா நாயக்  –  இந்திய மருத்துவம் (தனிப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

தர்மேந்திர பிரதான்  –  பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு (தனிப்பொறுப்பு)

சர்பானந்தா சோனோவால்  –  இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு)

பிரகாஷ் ஜாவடேகர்  –  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு).

பியூஷ் கோயல்  –  மின்சாரம், நிலக்கரி, நவீன மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (தனிப்பொறுப்பு)

ஜிதேந்திர சிங்  –  வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியம், அணு ஆற்றல், விண்வெளித்துறை

நிர்மலா சீதாராமன்  –  வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனி பொறுப்பு)

மகேஷ் சர்மா  –  கலாசாரம், சுற்றுலா, விமான போக்குவரத்து (தனி பொறுப்பு)

முக்தர் அப்பாஸ் நக்வி  –  நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை

ராம் கிருபால் யாதவ்  –  சுகாதாரம் மற்றும் குடிநீர்

ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி  –  உள்துறை

சன்வார் லால் ஜத்  –  நீர்வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துதல்

மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குந்தாரியா   –  வேளாண்மை

கிரிராஜ் சிங்  –  சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள்

ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்  –  ரசாயனம் மற்றும் உரம்

ஜித்தேஸ்வரா   – கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்

மனோஜ் சின்ஹா –   ரயில்வே

நிகல்சந்த்   –  பஞ்சாயத்து ராஜ்

உபேந்திர குஷ்வாஹா  –  மனிதவள மேம்பாட்டுத் துறை

பொன். ராதாகிருஷ்ணன்   – தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து

கிரண் ரிஜிஜு   –  உள்துறை

கிருஷ்ண பால்  –  சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்

சஞ்ஜீவ் குமார் பல்யான்  –  வேளாண் துறை

மனுஷ்பாய் தான்ஜிபாய் வாசவா  –  பழங்குடியினர் நலத்துறை

ரோசகேப் தாதராவ் தன்வே  –  நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம்

விஷ்ணுதேவ் சாய்   –  சுரங்கம் மற்றும் எஃகு

சுதர்ஷன் பகத்  –  ஊரக வளர்ச்சித் துறை

ராம் சங்கர் கத்தேரியா –   மனிதவள மேம்பாட்டுத் துறை

செளத்ரி   – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல்

ஜெயந்த் ஷின்ஹா  –  நிதி

ராஜ்யவர்தன் சிங் ரதோர்  –  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை

பாபுல் சுப்ரியா பரல் –   நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு

நிரஞ்சன் ஜோதி  –  உணவு பதனிடுதல் தொழில்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.