அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

2ஜி முறைகேடான உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

PC
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதியுள்ள “இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல்: 2014′ என்ற நூல் வெளியீட்டு விழா டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் ப. சிதம்பரம் பேசியது ‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கும் விவகாரத்தை வேறு விதமாக கையாண்டிருக்க முடியும். அதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தவுடன், அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்யுமாறு மன்மோகன் சிங்கிடம் கூறினேன். “முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கை அடிப்படையில், உரிமங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினேன். என்னுடைய கருத்துக்களை பரிசீலிப்பதாக அவர் கூறினார். பின்னர், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு விடப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு அனைத்து உரிமங்களை ரத்து செய்வதற்கு முன்பாகவே, அவர் ரத்து செய்திருக்கலாம். கடந்த ஆட்சியில் பொருளாதாரத்தை சரியாக மேம்படுத்தியிருந்தால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான அளவில் தோல்வியைச் சந்தித்திருக்காது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கட்சியை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியால்தான் பாஜக வெற்றி பெற முடிந்தது. அவருடைய செயல்பாடுகள் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டன. அதை மறுப்பதற்கில்லை. மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் திட்டமிட்டு பாஜக பிரசாரம் மேற்கொண்டது. எனினும், தமிழ்நாடு, கேரளம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் பிரசாரம் போதிய பலனளிக்கவில்லை’ என்று சிதம்பரம் கூறினார்.

Advertisements

1 thought on “2ஜி முறைகேடான உரிமங்களை மன்மோகன் சிங் ரத்து செய்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s