திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆர்.கே பேட்டை அருகே பாறை குட்டையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்த நபர்கள், குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக அப்பகுதியில் மிளாய் பொடியை தூவிச் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறை, 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறது. கொலை செய்யப்பட்டப் பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுவதால், அம்மாநிலத்திற்கும் காவல்துறையினர் விசாரணைக்காக சென்றுள்ளனர்.