‘பூஜை’ படத்துக்கான வரவேற்பைப் பார்ப்பதற்காக மதுரைக்கு விசிட் அடித்த நடிகர் விஷால், சூரி மகனுக்குப் பிறந்த நாள் என்பதை அறிந்து ராஜாக்கூர் கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். விஷாலை பார்த்ததும் ராஜாக்கூர் கிராமமே ஆனந்தத்தில் கொண்டாட, சூரி குடும்பத்தினரும் நெகிழ்ந்து போனார்கள். கடந்த 27ம் தேதி சூரி மகன் சர்வானுக்கு முதல் பிறந்த நாள். தனது சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் மகனின் பிறந்த நாளைக் மிக எளிமையாகக் கொண்டாடினார் சூரி.
“என் மகன் சர்வான். அம்பட்டுச் செல்லம். சர்வானுக்கு முதல் பிறந்த நாள். குடும்பத்தில் ஒருவராக வந்திருந்து அண்ணன் விஷால் வாழ்த்தினார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான நாள். நன்றி விஷால் அண்ணே!.” என்கிறார் சூரி இதுகுறித்து.