அரசியல், இந்தியா, தமிழ்நாடு

சிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை

D-1362
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான விசாரணை 12 மணிக்கு நடைபெறும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரங்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. ஆகையால் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது. இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க அதன் நிறுவனர் சிவசங்கரனுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் நெருக்குதல் கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிமாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்திற்கு தனது துணை நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், தயாநிதிமாறன், கலாநிதிமாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s