அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது!

sc

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியலை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் தவறு தெரிய வராமல், எல்லா விவரங்களையும் அளிப்பது நாடுகள் இடையே ரகசியத்தன்மையை பாதிக்கும் என்ற அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் விவரம் இன்று வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த பொதுநல மனு மீது, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. இந்தியர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு அனைத்துமே சட்டவிரோதமானதல்ல என்றும், அவற்றில் கறுப்பு பணம் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தால் அவை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதகி தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவரின் விவரங்களை மூடி சீலிட்ட உரையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசுக்குக் கிடைத்த பெயர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விரைவில் முழு விவரங்களை வெளியிட வேண்டுமென அரசை அது வலியுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் குறித்த முழுப் பட்டியலையும் மத்திய அரசு வெளியிடும் என நம்புவதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் அரசின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்த தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதகி முயன்ற போதிலும், வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்திடம் கொடுத்தால், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு பார்த்துக் கொள்ளும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பான முழுப் பட்டியலையும் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s