பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 87. அவர் உடல்நலக் குறைவால் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் காலமானர். அண்மையில், தனது வீட்டின் குளியலறையில் நிலைதடுமாறி விழுந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், முதுமை காரணமாக அவருடைய உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி இவருக்கும் முதல் படம். பூம்புகார், மறக்கமுடியுமா, பார் மகளே பார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் 1962 முதல் 1980 வரை தேனி ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆனார். இவரை எஸ்.எஸ்.ஆர் என்றும் லட்சிய நடிகர் என்றும் அழைத்து வந்தனர்.
துயர் பகிருகிறேன்