அரசியல், தமிழ்நாடு

தருமபுரி அருகே மீண்டும் பதற்றம்: 14 கிராமங்களில் 144 தடை உத்தரவு

தருமபுரி அருகே கோயிலில் வழிபாடு நடத்துவது காரணமாக இரண்டு சமுதாயத்தினரிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 14 கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாயக்கன்கொட்டாய் அருகே கொடகாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாயக்கன்கொட்டாய், நத்தம்காலனி, அதன் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள இரு வேறு சமுதாயத்தினர் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். கடந்த 2012-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி நாயக்கன்கொட்டாய் பகுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தையடுத்து, கடந்தாண்டு கொடகாரியம்மன் கோயில் வழிபாட்டின் போது மீண்டும் இரு சமுதாயத்தினரிடையே பதற்றம் ஏற்பட்டது.

எனவே, நிகழாண்டு கோயில் வழிபாட்டின்போது பதற்றம் நிகழாமல் தடுக்கும் விதமாக, நத்தம்காலனி, நாயக்கன்கொட்டாய், ஆண்டிஅள்ளி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 14 கிராமங்களில் 144 தடை உத்தரவை தருமபுரி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. 20 நாள்களுக்கு அமல்: அக்டோபர் 22-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட இந்தத் தடை உத்தரவு நவம்பர் 10-ஆம் தேதி நள்ளிரவு வரை 20 நாள்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக கோயிலுக்கு கூட்டமாக செல்லக் கூடாது, பிரச்னையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தனியாகவோ அல்லது மூன்று பேராகவோ கோயிலுக்குச் சென்று அமைதியான முறையில் வழிபட தடை எதுவும் இல்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டிஎஸ்பிக்கள் திருநீலகண்டன், அண்ணாமலை ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட 14 கிராமங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s