தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருப்பதால், சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதகை மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.