கடந்த 21 நாட்களாக சிறையில் இருந்தபோது, ஜெயலலிதா சொகுசு வசதிகள் எதையும் கேட்கவில்லை என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயசிம்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள ஜெயசிம்மா, சிறையில் ஜெயலலிதா எளிமையாகவே இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். சிறையிலிருந்து விடுவிக்கும் உத்தரவை வழங்கியபோதுகூட ஜெயலலிதா பெரிய அளவில் உணர்ச்சிவசப்படவில்லை என கூறிய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ஜெயசிம்மா, மிகுந்த மன உறுதி கொண்டவர் ஜெயலலிதா என்றும் கூறியுள்ளார். ஜாமின் உத்தரவு பற்றி அறிந்ததும், அதுதொடர்பான மகிழ்ச்சியை சசிகலா, இளவரசி ஆகியோருடன் ஜெயலலிதா பகிர்ந்துகொண்டதாக கூறிய ஜெயசிம்மா, அப்போது இனிப்பு வழங்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மறுத்தார். சிறை அதிகாரிகளால் தமக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என, இன்று சென்னை கிளம்பும்போது ஜெயலலிதா கூறியதாகவும், அப்போது நன்றி, குட்-பை என அவர் தெரிவித்ததாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி குறிப்பிட்டார். சிறையில் அரசியல் தொடர்பாக யாருடனும் ஜெயலலிதா பேசவில்லை என சுட்டிக்காட்டிய ஜெயசிம்மா, தம்மை பற்றியும் தமது குடும்பம் குறித்தும் ஜெயலலிதா விசாரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
மன உறுதியில் குறைவற்றவரானபடியால் தானே இத்தனை கோடியை சுருட்டி விட்டு 18 வருடம், பவுசாக வாழ்ந்துள்ளார்.
போங்காடா போக்கத்தவங்களே!
கேடு கெட்டதுக்களுக்கு கீரீடம் சூட்டுகிறீர்களே!