சுற்றுச்சூழல், தமிழ்நாடு, மழை நிலவரம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்

Rain
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் மழை 2 நாள்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஹுட்ஹுட் புயலாக மாறி ஆந்திர மாநிலத்தைத் தாக்கியது.

இந்த நிலையில் தமிழகம் – இலங்கை கடற்பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகம், புதுவையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s