அரசியல், இந்தியா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சசி தரூர் அதிரடி நீக்கம்

Shashi Tharoor
பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதன் காரணமாக, மத்திய முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து திங்கள்கிழமை நீக்கப்பட்டார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பாராட்டி, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற இணைய இதழில், சசி தரூர் கட்டுரை எழுதியது, காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த அவர், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு, கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கவில்லை.  அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடியை சசி தரூர் புகழ்ந்து பேசியதால், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி அதிருப்தியடைந்தது. இந்நிலையில், மோடி கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், சசி தரூரும் அமெரிக்காவில் இருந்தது, பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனிடையே, கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குவதற்கு காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வதாக சசி தரூர் தெரிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s