இலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம், அமெரிக்காவின் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டது. உலகம் முழுவதும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருதின், சிறந்த ஆவணப்படங்களின் பிரிவில் இந்த படம் போட்டியிடுகிறது. விருதுகளுக்கு தேர்வான நிகழ்ச்சிகளின் இறுதிப் பட்டியல் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும்.