ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அமைதிப் பணியில் இணைந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சக்தி தேவி. இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதில் தலைசிறந்த பணியை ஆற்றியதற்காக சக்தி தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.