அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

ஆந்திரத்தைப் புரட்டிபோட்ட ஹுட்ஹுட் புயல்: ஒரு தொகுப்பு

hudhud 2

hudhud 3

 

வங்கக் கடலில் உருவான ஹுட்ஹுட் புயல் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.  ஆந்திரத்தில் புயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவில் 3 பேர் புயலுக்கு உயிரிழந்தனர்.

புயல் காரணமாக, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் பலத்த சேதமடைந்தன. குடிநீர் விநியோகமும், மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் பெருமளவு சேதமடைந்துள்ளன. விமான சேவை, ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் சேதமாயின. ஆங்காங்கே, புயலால் பாதிக்கப்படாத நிலையங்களில் திங்கள்கிழமை காலை வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போட்டுச் சென்றனர். பால் விற்பனை நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. வீடுகளில் முடங்கியிருந்த மக்கள், திங்கள்கிழமை வீதிகளில் நடமாடினர்.  இப்புயலால் 320 கிராமங்களைச் சேர்ந்த 2.48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 223 முகாம்களில் 1.35 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடைய மக்களின் இயல்வு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பால் விற்பனை நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. அரை லிட்டர் பால், ஐம்பது ரூபாய் முதல் அறுபது ரூபாய்க்கும், ஒரு லிட்டர் குடிநீர் 35 ரூபாய்க்கும், ஒரு முட்டை, எட்டு ரூபாய் முதல் 10 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டீ யின் விலை அதிகபட்சமாக 15 ரூபாயாக உள்ளது.

hudhud

விசாகப்பட்டினத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிடவும், அங்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளை காணவும் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரில் சென்றபடி இடங்களைப் பார்வையிடுகிறார்.

இதனிடையே, தெற்கு ஒடிஸாவை ஞாயிற்றுக்கிழமை இரவு “ஹுட்ஹுட்’ புயல் தாக்கியதில் 48,000 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் மொஹபத்ரா கூறினார். புயல் தாக்கியதையடுத்து, 24 மின்மாற்றிகள், 600 மின் கம்பங்கள், 75 கிமீ நீளத்துக்கு மின் கம்பிகள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன என்று அவர் புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறினார். 2.33 லட்சம் மக்கள் வெளியேற்றம்: ஒடிஸாவில், புயல் காரணமாக 2.33 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 2,029 பாதுகாப்புக் குடில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, சத்தீஸ்கரை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. அது வேகம் குறைந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறக்கூடும். அதனால் சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம், ஒடிஸாவின் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திலும், ஜார்க்கண்ட், பிகாரில் அடுத்த 48 மணி நேரத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தன்டேவாடா உள்பட பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 24 மணி நேரமும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  நதிக்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோர்பா- விசாகப்பட்டினம் உள்பட 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s